உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பழனி கோவில் பக்தர்கள் வசதிக்காக நிலம் எடுப்பு

பழனி கோவில் பக்தர்கள் வசதிக்காக நிலம் எடுப்பு

மதுரை:சென்னை ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், உயர் நீதிமன்ற மதுரை கிளை தொடர்ந்து பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அந்த உத்தரவுகள் பின்பற்றப்படுகின்றன.'பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் மலையடிவாரத்தில் கிரி வீதிகளில் ஆக்கிரமிப்புகளால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது' என்ற மனுவை நேற்றும் நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்தது.அரசு தரப்பு: பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற, 56 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் பணி துவக்க நிலையில் உள்ளது. இவ்வாறு தெரிவித்தது.நீதிபதிகள்: கிரி வீதி அருகே காலியாக உள்ள பழனி நகராட்சிக்கு சொந்தமான நிலத்தை, கோவில் நிர்வாக பயன்பாட்டிற்கு ஒப்படைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்