மேலும் செய்திகள்
ஆசிய தரவரிசை பட்டியல்: அண்ணா பல்கலைக்கு 204வது இடம்
1 hour(s) ago | 1
உடுமலை:உடுமலை - மூணாறு வழித்தடத்தில், நிலச்சரிவு ஏற்பட்டதால், நேற்று காலை போக்குவரத்து பாதித்தது.மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில், நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதில், திருப்பூர் மாவட்டம் உடுமலையிலிருந்து, கேரள மாநிலம் மூணாறு செல்லும் ரோட்டில், எட்டாம் மைல் உள்ளிட்ட பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், இந்த ரோட்டில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.உடுமலையிலிருந்து, மறையூர், மூணாறு செல்லும் பஸ்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள், பாதி வழியில் நிறுத்தப்பட்டன. கேரளா மாநில அதிகாரிகள், ரோட்டில் சரிந்த பாறை, மண்ணை அகற்றிய பின், மதியம், 12:00 மணிக்கு மேல், வாகனங்கள் வழக்கம்போல் இயங்கின.
1 hour(s) ago | 1