உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விழுப்புரம் - வேட்டவலம் சாலையில் சிறுத்தை நடமாட்டம்?: மக்கள் அச்சம்

விழுப்புரம் - வேட்டவலம் சாலையில் சிறுத்தை நடமாட்டம்?: மக்கள் அச்சம்

விழுப்புரம்: கண்டாச்சிபுரம் அருகே விழுப்புரம் - வேட்டவலம் சாலையில், சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் பரவியதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் பகுதியில் உள்ள வீரபாண்டி, கடையம், பழைய கருவாட்சி, கல்வந்தல் ஆகிய கிராமங்களையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் வரை மலைத் தொடர் மற்றும் வனப்பகுதி அமைந்துள்ளது.நேற்று முன்தினம் இரவு நேரத்தில், வீரபாண்டி கிராமம் அருகே உள்ள வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும், வேட்டவலம் ஆஞ்சநேயர் கோவில் அருகே சாலையை கடந்ததாகவும் பொதுமக்களிடையே நேற்று காலை தகவல் பரவியது. இதனால் அப்பகுதி கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள், சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறப்பட்ட வீரபாண்டி பகுதியில், விழுப்புரம் வனச்சரகர் கமலக்கண்ணன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், தகவல் கூறபட்ட பகுதிகளில் ஆய்வு செய்தோம். சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக உறுதியாகவில்லை. திருவண்ணாமலை மாவட்ட வனத்துறையினர் வேட்டவலம் பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் எல்லை பகுதி கிராமங்களில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அறிந்தால் பொதுமக்கள், 99626 37936 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொண்டு வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ