உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தண்ணீர் பற்றாக்குறையால் குறைந்தது நீர் மின் உற்பத்தி

தண்ணீர் பற்றாக்குறையால் குறைந்தது நீர் மின் உற்பத்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : தமிழக மின் வாரியத்திற்கு, 2,321 மெகா வாட் திறனில், 47 நீர் மின் நிலையங்கள் உள்ளன. மழை பெய்யும் போது, அந்த மின் நிலையங்களை ஒட்டியுள்ள அணைகளில் தண்ணீர் தேக்கப்பட்டு, மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது.இதில், ஒரு யூனிட் நீர் மின் உற்பத்தி செலவு சராசரியாக, 75 காசுக்கு குறைவாக உள்ளது.போதிய மழை இல்லாததால், தற்போது அணைகளில் தண்ணீர் வரத்து மிகவும் குறைவாக உள்ளது. இதனால், தினமும் காலையில் சராசரியாக, 500 மெகா வாட் வரையும்; மாலையில், 750 மெகா வாட் வரையும் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தண்ணீர் வரத்து நன்றாக இருக்கும் சமயத்தில், நீர் மின் நிலையங்களில் தினமும், 1,500 மெகா வாட் வரை மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தற்போது, தண்ணீர் இருப்பு மிகவும் குறைவு. காலை 6:00 மணிக்கே, சூரிய வெளிச்சம் கிடைப்பதால், சூரியசக்தி மின்சாரம் அதிகம் உற்பத்தியாகிறது. எனவே, காலையில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த, 75 மெகா வாட்டிற்கு குறைவாகவும்; மாலையில், 500 மெகா வாட் வரையும் நீர் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. கோவை காடம்பாறை நீரேற்று மின் நிலையத்தில் அதிக அளவாக, 300 மெகா வாட் உற்பத்தி செய்யப்படுகிறது.அங்கு மட்டுமே ஒரு முறை மின் உற்பத்திக்கு பயன்படுத்திய தண்ணீர், மீண்டும் அணைக்கு எடுத்து செல்லப்பட்டு, தேவைக்கு ஏற்ப பயன்படுத்தப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ஆறுமுகம்
ஏப் 30, 2024 08:04

ஜல்ஜீவன் குழாய் பதிச்சுடலாம். தண்ணீருக்கு நான் கேரண்டி.


Kasimani Baskaran
ஏப் 30, 2024 06:27

ஒரு முறை மின்சாரம் எடுத்த பின் அந்த மின்சாரத்தை வைத்தே திரும்ப தண்ணீரை அணைக்கு கொண்டு செல்வது போல காமடிகள் வேறு எங்கும் அறங்கேறாது சிமுலிங்க் மாடல் சிமுலிங் மாடல் என்பது திராவிட மாடலுடன் குழப்பிக்கொள்ள வேண்டாம் சிமுலிங்க் மூலம், தொகுதி வரைபடங்களை உருவகப்படுத்துவதன் மூலம் சிக்கலான அமைப்புகளைப் புரிந்துகொண்டு பகுப்பாய்வு செய்யலாம் மூலம் இதை செய்து பார்த்து அது எத்தகைய காமடி என்று புரிந்து கொள்ள முடியும்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை