உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்

சென்னை: 12ம் வகுப்பு பொதுத்தேர்வில், இம்முறை குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார்.இது குறித்து ஸ்டாலின் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! உயர்கல்வியில் சிறந்து விளங்கி, தலைசிறந்த பொறுப்புகளில் நீங்கள் மிளிர வேண்டும்!இம்முறை குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம். அடுத்து காத்திருக்கும் வாய்ப்புகள் உங்கள் முன்னேற்றத்துக்கான துணையாக அமையும் என்ற நம்பிக்கையுடன் முன்னே செல்லுங்கள்!. இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.,

தமிழகத்தில் 12ம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். வாழ்வின் அடுத்தக்கட்டத்திற்கு செல்லும் நீங்கள், உயர்கல்விப் படிப்பிலும் சிறந்து விளங்கி, தங்கள் பெற்றோருக்கும் நாட்டிற்கும் நற்பெருமை சேர்க்கும் விதத்தில் பல்வேறு சாதனைகளைப் புரிய எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை

இன்றைய தினம் வெளிவந்துள்ள பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் வெற்றி பெற்று, கல்லூரிக் கல்விக்குச் செல்லவிருக்கும் மாணவ மாணவியர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். புதிய துறைகளும், பல்வேறு வாய்ப்புகளும், அனைவருக்கும் சிறப்பானதொரு எதிர்காலத்தை உருவாக்கக் காத்திருக்கின்றன. மாணவர்கள், உயர்கல்வியில் தாங்கள் விரும்பும் துறையில் சாதனை படைக்க வேண்டிக் கொள்கிறேன். பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் துவண்டு விடாமல், அடுத்த முறை சிறப்பாக உழைத்து, முழு நம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெறவும் இறைவனை பிரார்த்திக்கிறேன். அனைவருக்கும் மிகச் சிறப்பான எதிர்காலத்தை ஆண்டவன் அருளட்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 44 )

murthy c k
மே 09, 2024 11:29

முதல்வராக கூட வாய்ப்பு இருக்கு, தளர வேண்டாம் மாணவர்களே


kumarkv
மே 08, 2024 19:08

தளரவேண்டாம், எதுவுமே பாஸ் பண்ணாமல் நான் இல்லையா


Venkataraman
மே 08, 2024 08:17

மனம் தளராமல் இருக்க, அடுத்த தடவை படிக்காமலே, தேர்வு எழுதாமலே பாஸ் செய்து விடலாம் பாவம் மாணவர்கள்


Vasanth
மே 07, 2024 16:44

நான் என்ன நன்றாக படித்த முதலமைச்சர் ஆனேன், நானே ஒரு உதாரணம்னு தைரியமாக பேசுங்க நீங்க தான் தைரியமான ஆள் ஆச்சே


cpraghavvendran
மே 07, 2024 14:43

நாம் நம் தேர்தல் வாக்குறுதியாக அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்து விடுவோம் அது நம் மாணவர்கள் படிக்காமல் பிச்சை எடுக்க உதவியாக இருக்கும்


MADHAVAN
மே 07, 2024 12:32

மதிப்பெண் என்பது ஒரு சாதாரண எண்கள் மட்டுமே, உங்களது மற்றும் உங்களின் பெற்றோரின் கனவுகளை நிறைவேற்ற அது ஒருபோதும் உதவாது, முயற்சி திருவினையாக்கும், விடாமுயற்ச்சி விஸ்வரூப வெற்றி


அப்புசாமி
மே 07, 2024 07:51

கவலை வாணாம்.. எல்லோருக்கும்.மெடிக்கல் சீட், இஞ்சினீரிங் சீட் குடுத்து டாக்டர், இஞ்சினீயர் ஆக்கிடுவோம்.


Jai
மே 06, 2024 19:53

இததே நற்சொற்களை நீட் தேர்வு ரிசல்ட் வரும்போதும் பேசினால்தான் பொறுப்பான முதல்வர் என்று நினைக்கலாம்.


Jai
மே 06, 2024 18:52

நல்ல மார்க் எடுத்தவன் இன்ஜினியரிங் கல்லூரி இல் படிப்பான். இன்று மார்க் எடுக்காத மாணவன் தொடர்ந்து முயற்சியை கைவிடாமல் தொழில் செய்து முன்னேறி வந்தால் இன்று இன்ஜினியரிங் படிப்பவன் நாளை தொழிலாளியாக முன்னேறும் மாணவனிடம் வந்து நிற்பான். பள்ளியில் வரும் மதிப்பெண் வருங்காலத்தை நிர்ணயிக்காது. முயற்சி அக்கறை ஆர்வம் உடன் எந்த தொழில் அல்லது வேலை செய்தாலும் முன்னேற்றம் வரும். ஆகவே மதிப்பெண் குறைவு என்று யாரும் வருத்தப்பட வேண்டியதில்லை


GANESUN
மே 06, 2024 18:12

அறிவாலயம் திறந்திருக்கும்


மேலும் செய்திகள்





புதிய வீடியோ