உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரை எய்ம்ஸ் செங்கலை பார்லி.,யில் காட்ட வேண்டியது தானே : திருச்சியில் பழனிசாமி கேள்வி

மதுரை எய்ம்ஸ் செங்கலை பார்லி.,யில் காட்ட வேண்டியது தானே : திருச்சியில் பழனிசாமி கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி : தமிழகத்தில் மதுரை எய்ம்ஸ் செங்கலை காட்டியவர்கள் நாடாளுமன்றத்திற்கு சென்று காட்டி இருக்க வேண்டியது தானே என திருச்சியில் நடைபெற்ற அ.திமுக. பிரசார பொதுகூட்டத்தில் அதன் பொது செயலாளர் பழனிசாமி கூறினார்.விரைவில் நடைபெற உள்ள பார்லி., பொது தேர்தலில் அதிமுக 32 இடங்களிலும் தேமுதிக 5 இடங்களிலும் பிற கூட்டணி கட்சியினர் இரண்டு இடங்களிலும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் அதிமுக பிரசார பொது கூட்டம் மற்றும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. திருச்சி வண்ணாங்கோயில் பகுதியில் நடந்த பொது கூட்ட மேடையில் ஒரே நேரத்தில் 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அதிமுக பொது செயலாளர் இடைப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து பேசிய பழனிசாமி தேனீக்களை போன்று சுறுசுறுப்பாக செயல்பட்டு வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். தேர்தலில் 3 கூட்டணியினர் போட்டியிட்டாலும் தமிழ்நாட்டில் அதிமுக, திமுக இடையே தான் நேரடி போட்டி.4 ஆண்டு காலம் சிறப்பான ஆட்சியை வழங்கியது அதிமுக அரசு. பிரதமர் குறித்தும் என்னைப்பற்றி மட்டுமே முதல்வர் ஸ்டாலின் விமர்சித்து வருகிறார். தமிழக மக்களுக்கு 3 ஆண்டுகளில் திமுக அரசு என்ன செய்தது? அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியில் 10 மருத்துவகல்லூரிகள் கொண்டு வரப்பட்டது. 3 ஆண்டுகளில் ஒரு மருத்துவககல்லூரியாவது துவங்கியது உண்டா.

பா.ஜ.,வைத் தொடாத இ.பி.எஸ்.,

திருச்சியில் நடந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி, தி.மு.க.,வை கடுமையாக சாடினார். ஆனால், பா.ஜ.,வுக்கு எதிராக சிறு விமர்சனத்தைக் கூட வைக்கவில்லை. தி.மு.க.,வுக்கும் பா.ஜ.,வுக்கும் கள்ள உறவு என்று மட்டும் ஒரு முறை சொன்ன அவர், பா.ஜ.,வுக்கு எதிராக நேரடியாக பேசவில்லை.

ஸ்கிரிப்ட மாத்தப்பா உதயநிதி!

மூன்று ஆண்டுகளாக எய்ம்ஸ் செங்கல்லை தூக்கி வீதிகளில் காட்டி கொண்டிருக்கிறார் உதயநிதி. ஸ்கிரிப்ட மாத்துப்பா உதயநிதி. கதைய மாத்து. நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்திருக்க வேண்டும். அதற்கு துணிவு திராணி இல்லாமல், இங்க வித்தை காட்டிக் கொண்டிருக்கிறீர்களா? 38 எம்பிக்கள் 5 ஆண்டுகள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வந்தோம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Bala
மார் 25, 2024 00:44

திருட்டுத் திராவிடிய தெலுங்கன்கள் மாதிரி தமிழர்களும் காதில் பூ வைத்திருப்பவர்கள் என்ற எண்ணம் உன்னால் தான் அவன்கள் ஊளையிடுகின்றாங்கள் இல்லையென்றால் சுடுகாட்டுக்குப் போயிருப்பான்கள்


Arachi
மார் 24, 2024 20:56

காட்டிட்டா போச்சி இதுக்காகப்போய் தூக்கம் போகிற அளவுக்கு கவலைப்படாதீங்க அதிமுகவை அனாதையாக ஆக்கிட்டியே பரட்டை


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை