உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆடல் - பாடல் நிகழ்ச்சியில் போலீசை தாக்கியவர் கைது

ஆடல் - பாடல் நிகழ்ச்சியில் போலீசை தாக்கியவர் கைது

ஜோலார்பேட்டை : திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த திரியாலம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு, கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆடல், பாடல் நிகழ்ச்சியைக் காண ஏராளமானோர் வந்திருந்தனர். பாதுகாப்பு பணியில் ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் தலைமையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.அங்கு திரியாலம் கிராமத்தைச் சேர்ந்த கார் டிரைவர் கோவிந்தராஜ், 44, 'ஒன்ஸ்மோர்' கேட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் ரகளையில் ஈடுபட்டார். போலீசார் பலமுறை அறிவுறுத்தியும் அங்கிருந்து செல்லாமல் தொடர்ந்து வாக்குவாதம் செய்தார். ஒரு கட்டத்தில் போலீசார் அவரை வெளியேற்ற முயன்றபோது, தலைமைக் காவலர் கணேசனை தாக்கினார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கோவிந்தராஜை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்