உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓட்டு எண்ணிக்கையில் அசம்பாவிதம் தடுக்க நடவடிக்கை

ஓட்டு எண்ணிக்கையில் அசம்பாவிதம் தடுக்க நடவடிக்கை

சென்னை: சென்னை மாவட்டத்தில், மூன்று லோக்சபா தொகுதி களில் பதிவான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள ராணிமேரி கல்லுாரி, லயோலா கல்லுாரி. அண்ணா பல்கலை ஆகிய இடங்களில், மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ராதாகிருஷ்ணன், போலீஸ் கமிஷனர் சந்திப் ராய் ரத்தோட் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.பின், ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளில் பதிவான ஓட்டுகள், சட்டசபை தொகுதி வாரியாக ஓட்டு எண்ணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மையங்களில், எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை