* தொழிலாளர் நலத்துறையின் கீழ் இயங்கும் இணையதள சேவையில், தற்போது வழக்கமான பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இத்துறையின் இணையதளத்தில், எடை அளவுகளை முத்திரையிடும் பணிக்கான காலவரம்பு, இம்மாதம் 30ம் தேதியுடன் முடிவதாக இருந்தது. தற்போது, ஆகஸ்ட், 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த கால நீட்டிப்புக்கு, எவ்வித தாமத கட்டணமும் வசூலிக்கப்படாது என, தொழிலாளர் நலத்துறை கமிஷனர் அதுல்ஆனந்த் தெரிவித்துள்ளார்.* மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய மாவட்ட கலெக்டர், தொண்டு நிறுவனம், மருத்துவர்; சமூக பணியாளர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள்; மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக வேலை வாய்ப்பு அளித்த தனியார் நிறுவனம் என, ஆறு வகையான விருதுகளை, சுதந்திர தின விழாவில், முதல்வர் வழங்க உள்ளார். 10 கிராம் தங்கத்துடன் கூடிய விருதுக்கு தகுதி உள்ளவர்கள், https://awards.tn.gov.inஎன்ற இணையதளத்தில் உள்ள படிவத்தில், ஜூலை 5க்குள் விண்ணப்பிக்கலாம்.* திருவள்ளூர், திண்டினம், திருப்பத்துார், வாணியம்பாடி, ஸ்ரீவில்லிபுத்துார், கோபிச்செட்டி பாளையம், விருதுநகர், நாகப்பட்டினம், ராசிபுரம் ஆகிய ஒன்பது நகராட்சிகளின் கமிஷனர்களை இடமாற்றம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.