உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்

பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவர்கள், மருத்துவம், இன்ஜினியரிங், சட்டம், கால்நடை, அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட உயர் படிப்புகளில் சேர்கின்றனர். இந்த படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும், சரியான பாடப்பிரிவுகளை தேர்வு செய்யும் வகையில், ஜூலை, 3, 10, 18, 24 மற்றும், 29ம் தேதிகளில், ஆன்லைன் வழியே உளவியல் கவுன்சிலிங் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என, சி.பி.எஸ்.இ., அறிவித்து உள்ளது._____________மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை, தமிழக அரசின் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்திற்காக கடந்த நிதியாண்டில், 8,123.83 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டுக்கு, 13,722.47 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுஉள்ளது.இத்திட்டத்தின் கீழ், இந்தாண்டு மார்ச் 31ம் தேதி வரை, முகாம் வாழ் இலங்கை தமிழர் குடும்பங்களைச் சேர்ந்த, 14,723 மகளிர் உட்பட, ஒரு கோடியே, 15 லட்சத்து, 27,172 மகளிர் பயனடைந்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை