உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்ட கல்லுாரிகளில் சட்டத்தமிழ்: அமைச்சர் ரகுபதி அறிவிப்பு

சட்ட கல்லுாரிகளில் சட்டத்தமிழ்: அமைச்சர் ரகுபதி அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''அரசு சட்டக் கல்லுாரிகளில், 'சட்டத்தமிழ்' என்ற புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும்,'' என, அமைச்சர் ரகுபதி அறிவித்தார்.சட்டசபையில் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

நீதி நிர்வாகம்

 ↓திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை; கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர்; கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் ஆகியவற்றில், ஒரு மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் புதிதாக அமைக்கப்படும் ↓புதுக்கோட்டை திருமயத்தில், தற்போது இயங்கி வரும் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், தனித்தனியாக பிரிக்கப்படும் ↓போதை மருந்துகள் மற்றும் மன மயக்க பொருட்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரிக்க, திருநெல்வேலியில் சிறப்பு நீதிமன்றம்; கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் மற்றும் மதுரையில், ஒரு கூடுதல் குடும்ப நல நீதிமன்றம் அமைக்கப்படும் ↓சென்னையில் நுகர்பொருள் குற்றப் புலனாய்வு துறையால் பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரிக்க, சென்னையில் ஒரு சிறப்பு பெருநகர நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அமைக்கப்படும் ↓செங்கல்பட்டில் ஒரு விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும்.

சிறைத்துறை

 ↓வேலுாரில் உள்ள சிறைக்காவலர் பயிற்சி மையம், திருச்சிக்கு மாற்றப்பட்டு, மாநில சீர்திருத்த நிர்வாகப் பயிற்சி நிறுவனம் ஏற்படுத்தப்படும் ↓தஞ்சாவூர் திருமலை சமுத்திரத்தில் மாவட்ட சிறைச்சாலை அமைக்கப்படும்: சென்னை புழல் மத்திய சிறையில், கூடுதலாக 1,000 சிறைவாசிகளை அனுமதிக்கும் வகையில், கூடுதல் தளம் கட்டப்படும். புழல் மத்திய சிறையில், பார்வையாளர் காத்திருப்பு கூடம் கட்டப்படும்

சட்டத்துறை

 ↓பட்டறைப்பெரும்புதுார் மற்றும் புதுப்பாக்கத்தில் செயல்படும், அரசு சட்டக் கல்லுாரிகளில், ஐந்தாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு சட்டப்படிப்புகள், நடப்பு கல்வியாண்டு முதல் துவக்கப்படும் ↓ஆறு அரசு சட்டக் கல்லுாரிகளில், ஐந்து மற்றும் மூன்றாண்டு சட்டப்படிப்புகளில், தலா 40 மாணவர்கள் வீதம், 480 மாணவர்கள் கூடுதலாக அனுமதிக்கப்படுவர் ↓அனைத்து அரசு சட்டக் கல்லுாரிகளிலும், 'பயிற்சி பேராசிரியர்' என்ற சிறப்பு திட்டம் நடைமுறைக்கு வரும் ↓அரசு சட்டக் கல்லுாரிகளில், 'சட்டத்தமிழ்' என்ற புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் ↓சீர்மிகு சட்டப்பள்ளியில் புதிதாக இரண்டு முதுகலை சட்டப்படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும்; தேசிய மற்றும் சர்வதேச அளவில், 'மாணவர் மற்றும் ஆசிரியர் பரிமாற்ற திட்டம்' செயல்படுத்தப்படும்.இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Saravanakumar Malaichami - சரவணகுமார் மலைச்சாமி
ஜூன் 25, 2024 10:29

தமிழ் நாட்டு கோர்ட்களிலே ஆங்கிலம் தெரியாமல் வக்கீல்கள் திணறுவதை தினமும் பார்க்க முடிகிறது


GMM
ஜூன் 25, 2024 06:28

சட்ட தமிழ், மருத்துவ தமிழ், பொறியியல் தமிழ் கொண்டு வந்து திராவிட மாடல், சோமாலிய மாடல் ஆக மாற வேண்டும். தமிழ் சமய நூல்கள் ஏராளம். அதனை முதலில். கற்பிக்க வேண்டும். சட்டம், பொறியியல், மருத்துவம் பிழைப்பிற்கு தேவையான படிப்பு.


sankaranarayanan
ஜூன் 25, 2024 06:19

தமிழ் நாட்டில் சட்டம் பயின்று வேறே எந்த மாநிலத்திலும் மத்தியில் உள்ள உச்ச நீதி மன்றத்திலும் இவர்கள் சென்று இனி வாதாடவே முடியாது மாணவர்களின் எதிர்காலத்தை பாழடிக்கும் திட்டம் இதை உடனடியாக எதிர்க்கட்சிகள் வெகுவாக எதிர்க்க வேண்டும்


Kasimani Baskaran
ஜூன் 25, 2024 04:52

பள்ளிக்கூடம் காட்டுவோம், அவற்றை நன்றாக பராமரிப்போம் என்று சொல்லாமல் சிறையில் புதிய தளம் அமைப்போம் என்று சொல்வது குற்றவாளிகளின் எண்ணிக்கை விண்ணை முட்டி இருக்கிறது என்பதற்கான அத்தாட்சி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை