உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீட் தேர்வு மதிப்பெண்களில் குளறுபடி: 650 எடுத்தாலும் அரசு கல்லுாரி கிடைக்காது

நீட் தேர்வு மதிப்பெண்களில் குளறுபடி: 650 எடுத்தாலும் அரசு கல்லுாரி கிடைக்காது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''நீட் தேர்வில் கருணை அடிப்படையில், பலர் அதிக மதிப்பெண் பெற்று உள்ளதால், 650 மதிப்பெண் பெற்றவர்களாலும், அரசு மருத்துவக் கல்லுாரியில் சேர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.அமைச்சர் கூறியதாவது:இந்தாண்டு நீட் தேர்வு எழுதியவர்களில் 67 பேர், 720க்கு 720 என, முழு மதிப்பெண் பெற்று உள்ளனர். 2021ல் மூன்று பேரும், 2022ல் ஒருவரும், 2023ல் இரண்டு பேரும் முழு மதிப்பெண் பெற்றிருந்தனர். இந்தாண்டு 67 பேர் பெற்றிருப்பது, நீட் தேர்வின் மீதான சந்தேகத்தை அதிகரித்துள்ளது.இதில், ஹரியானா மாநிலம் பரீதாபாத் என்ற நகரத்தில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் படித்த ஏழு பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். இந்த ஏழு பேரின் வரிசை எண்களும் தொடர்ச்சியாக உள்ளதாக, சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.நீட் தேர்வுக்கான மொத்த வினாக்கள் 180. ஒவ்வொரு சரியான வினாக்களுக்கு, 4 மதிப்பெண் வழங்கப்படும். தவறான பதில்களுக்கு, 5 மதிப்பெண் குறைக்கப்படும். இதன்படி, 720 மதிப்பெண் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வெளியாகி உள்ள தேர்வு பட்டியலில், 718 மற்றும் 719 மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளன.ஒரு கேள்விக்கு பதில் அளிக்காமல் இருந்தால், 716 மதிப்பெண் வழங்கியிருக்க வேண்டும். தவறாக பதில் அளித்து இருந்தால், 715 மதிப்பெண் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், 718, 719 எவ்வாறு வழங்கப்பட்டது என்று தெரியவில்லை. இதனால், பெரிய அளவிலான முறைகேடுகள் நடந்திருப்பதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர். இதற்கு, தேசிய தேர்வு முகமை கருணை மதிப்பெண் வழங்குவதாக தெரிவிக்கின்றனர். கருணை மதிப்பெண் வழங்கும் முறை எப்போது துவங்கப்பட்டது; யாருக்கெல்லாம் வழங்கப்படுகிறது என்ற கேள்விக்கு, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி வழங்கப்பட்டதாக கூறுகின்றனர்.நேரப் பற்றாக்குறை தொடர்பான பிரச்னைகளுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், அது தொடர்பான தகவலை மத்திய அரசு வெளியிடவில்லை. நீட் தேர்வு எழுதிய 23.33 லட்சம் பேரில், எத்தனை பேருக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது என்று கூறாமல் இருப்பது நியாயமில்லை. இதனால் இந்தாண்டு, 650 மதிப்பெண் எடுத்தவர்களுக்கு கூட, அரசு மருத்துவக் கல்லுாரியில் சேர்ந்து படிப்பதற்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம். இந்த குழப்பங்களுக்கு, தேசிய தேர்வு முகமை நிச்சயம் பதில் அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

தமிழன்
ஜூன் 22, 2024 09:11

திமுக ஆட்சி கலைக்கப்பட்டது என்று செய்தி வரும் வரை தமிழக மக்கள் ஓயமாட்டார்கள்.. அய்யா அமைச்சரே.. கொஞ்சம் ஓரமாக போய் விளையாடுங்க இது தமிழ் நாடு


ஆரூர் ரங்
ஜூன் 08, 2024 19:21

இந்தாண்டு எஸ்எஸ்எல்சி வகுப்பு தேர்வு மொத்த தேர்ச்சி சதவீதம் 91.55 . ஆனா பாதி பேருக்கு அஞ்சாங்கிளாஸ் கணக்கே தகராறு. நாம நீட்டு பத்திப் பேசலாமா?


Jaykay
ஜூன் 08, 2024 18:17

செய்தித் தாள்களைப் படிக்காமல் பொது வெளியில் கருத்து தெரிவிக்க முற்படக் கூடாது கருத்து கண்ணாயிரம். விஜய பாஸ்கர் கிழித்தாராமா, மா. சுப்ரமணியம் கிழிக்கவில்லையாம் . மா. சுப்ரமணியம் காலத்தில் கொரோனா உயிர் பலி குறைந்ததற்கு அவர் பம்பரமாக சுழன்று நடவடிக்கைகள் எடுத்தது தான் காரணம் என்பதை அறியாமல் உளரக்கூடாது.


s chandrasekar
ஜூன் 08, 2024 14:54

Heavy loss due to NEET. No other way. NEET IS A MUST.


Senthil Nathan
ஜூன் 08, 2024 12:29

ஒரு மினிஸ்டர் மாதிரி பேசனும், கிளி சோசியக்காரன் மாதிரி பேச கூடாது ?


s chandrasekar
ஜூன் 08, 2024 14:56

He is speaking what is his personal opinion. We should ignore it. Oflate he is following g his Guru the Grest Vaiko.


கனோஜ் ஆங்ரே
ஜூன் 10, 2024 12:04

பதிவெண்ணில் தொடர் உள்ள 27 பேர் எப்படிய்யா முதல் ரேங்க வாங்க முடியும்... தமிழ்நாட்டு மாணவர்களை விடவா.... ஹரியான மாணவர்கள். ஆங்கிலத்தில் ஏபிசிடியே ஒழுங்கா படிக்கத் தெரியாத இந்திக்காரனுங்க எப்படிய்யா முதல் ரேங்க் வாங்க முடியும்...


சதீஷ்
ஜூன் 08, 2024 10:00

திமுக குழப்பம் என்பதை கயிறு திரித்து கூறப்பட்ட வார்த்தை தான் இருக்கும்


S.jayaram
ஜூன் 08, 2024 09:35

தேர்வில் ஒரே பயிற்சி மையத்தை சேர்ந்தவர் கள் ஆயிரக்கணக்கில் தேர்ச்சி பெற்றது எப்படி அது பற்றி யாராவது மூச் விட்டீர்களா அல்லது மறு தேர்வு நடத்தினார்களா, எதுக்கு எம்பலாய்மெட் ஆபீஸ் சிறையில் இருக்கும் ஒரு மந்திரிக்கு கொடுத்தது போல மாவட்டங்களில் அலுவலகங்கள் அங்கு வேலை பார்ப்பவர்கள் எல்லோரும் வந்து பதிய வருபவர்கள்


visu
ஜூன் 08, 2024 07:57

நீட் தேர்வு கடினம் அதனால் தற்கொலை என புலம்புகின்றனர் 720 மார்க் வாங்கினால் தேர்வு சுலபமாக உள்ளது என்று சொல்லாமல் சந்தேகமாக இருக்கிறது என்கிறார்கள்


Muthu Kumaran
ஜூன் 09, 2024 08:57

ஆக மொத்தம் நீட் தேர்வு வேண்டாம், 2500 கோடி தனியார் காலேஜ் நாட்டம் .


விஸ்வநாத் கும்பகோணம்
ஜூன் 08, 2024 07:37

நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க முடியாது அது சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி நடைபெறும் என்பதை பல நூறு தடவை மத்திய அரசு மற்றும் சுப்ரீம் கோர்ட் சொன்னாலும் விடாமல் பொய் பிரச்சாரம் செய்யும் திமுகவின் நோக்கம் விஷமத்தனமானது. மாணவர்கள் எதிர்கால வாழ்கையுடன் விளையாடும் திமுகவின் பிரசாரம் கண்டிக்கத்தக்கது. இதில் அஇஅதிமுகவும் பாஜக எதிர்ப்புக்காக சேர்ந்து கொள்வது வேடிக்கையாக உள்ளது. மக்கள் இந்த அரசியல் வேடிக்கைகளை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும்.


Svs Yaadum oore
ஜூன் 08, 2024 07:17

இந்த குழப்பங்களுக்கு, தேசிய தேர்வு முகமை நிச்சயம் பதில் அளிக்க வேண்டுமாம் .....திராவிடனுங்க நடத்தும் தேர்வெல்லாம் அப்படியே நியாயமான அப்பழுக்கில்லாமல் தேர்வு நடத்தி அறுத்து தள்ளி விட்டார்கள் .....TNPSC தேர்வு அனைத்தும் முறைகேடு ....தேர்வு நடத்தியும் பல வருடங்களாக தேர்வு முடிவு அறிவிக்கப்படாது ...அதை சரி செய்ய துப்பில்லை ....


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி