உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செங்கோல் குறித்து தவறான பேச்சு: மதுரை எம்.பி.,க்கு கண்டனம்

செங்கோல் குறித்து தவறான பேச்சு: மதுரை எம்.பி.,க்கு கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்: லோக்சபாவில் செங்கோல் குறித்து தவறாக பேசி, தமிழர்களுக்கு தலைக்குனிவை ஏற்படுத்திய மா.கம்யூ., எம்.பி., வெங்கடேசனுக்கு ஹிந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.இதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: லோக்சபாவில் பேசிய மதுரை எம்.பி., வெங்கடேசன், தமிழர் பாரம்பரிய அடையாளமாக விளங்கும் செங்கோலையும், தமிழ் பெண்களையும் கேவலப்படுத்தி பேசியது கண்டிக்கத்தக்கது. செங்கோல் என்பது நடுநிலை தவறாது ஆட்சிக்கான அதிகாரத்தின் குறியீடாக விளங்குவது என தமிழ் இலக்கியங்களில் சிறப்பித்து கூறப்படுகிறது.திருவள்ளுவர் தனது திருக்குறில், ஆட்சி செய்யும் மன்னனின் செங்கோல் தன்மையை எடுத்து கூறுகிறார். நீதி மன்றங்களில் நடுநிலையை துலாக்கோல் அடையாளப்படுத்துவது போல செங்கோல் என்பது ஆட்சியின் அடையாளம்.மதுரையம்பதியில் அன்னை மீனாட்சி அரசாட்சி செய்வதால், செங்கோல் தரும் வைபவம் இன்றும் நடக்கிறது என்பதை மதுரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி., மறந்தது மகா கேவலம். இன்றளவும் ஆன்மீகம் வளர்த்தெடுக்கும் ஆதீனங்கள், ஆட்சியாளர்களுக்கு செங்கோல் அளித்து நீதிநெறி தவறாமல் ஆட்சி செய்ய வாழ்த்தும் பாரம்பரியத்தின் அடையாளமாக செங்கோல் விளங்குகிறது.செங்கோல் மற்றும் அதை ஏந்தி ஆட்சி செய்த தமிழ் மன்னர்கள் குறித்து எம்.பி., கேவலமாக பேசிய போது, தி.மு.க., எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் கைதட்டி ரசிக்கிறார். தி.மு.க.,வினரும், அதன் கூட்டணி கட்சியினரும் ஹிந்து விரோத கட்சிகள் மட்டுமல்ல; தமிழ், தமிழர் விரோத கட்சிகள் என, ஆகிப்போனதை தமிழர்கள் உணர வேண்டும்.தமிழ், தமிழ்நாடு என பேசி, பேசியே ஏமாற்றிய தி.மு.க.,வின் உண்மை முகத்தை கூட்டணி கட்சியான கம்யூ., எம்.பி., லோக்சபாவில் பேசி அசிங்கப்படுத்தி உலகறிய செய்து விட்டார். தமிழனை, தமிழ் இலக்கியங்களை, தமிழன் பண்பாட்டை, பாரம்பரியத்தை கேவலப்படுத்திய கம்யூ., எம்.பி., மற்றும் அதனை கைதட்டி வரவேற்ற தி.மு.க., எம்.பி.,க்களும் தமிழர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

சுராகோ
ஜூலை 05, 2024 08:42

இவர்கள் அதாவது 40 பெரும் தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்க போகவில்லை. இவரை நியாய படுத்த பலர் கிளம்புவார்கள் பாருங்கள்.


Rammohan Ramachandran
ஜூலை 04, 2024 14:00

சு.வெங்கடேஷ் பேசுறது DMK கருணாநிதி செங்கோல் பத்தி ......


Yes
ஜூலை 04, 2024 12:22

நடந்த தேர்தலில் வாக்கு சாவடிகளுக்குள் வாக்கு பதிவிட சென்ற பதினெட்டு வயது சின்ன பசங்களுக்கெலாம் கையை சூரியன் போல் விரித்து சைகை காட்டி பசங்களை ஏமாற்றிய கூட்டத்தை சேர்ந்தவன்


R Hariharan
ஜூலை 04, 2024 12:18

இரண்டாவது முறையாக தெஇர்ட்பேட்டனுப்படம் இந்த லோக் சபா மெம்பெர் அவருக்கு வேலையை செய்யவும். மதுரை சுற்றி நிறைய வேலை இருக்கு. அதை விட்டுவிட்டு வேண்டாத வேலை செய்ய வேண்டாம். ரயில் சம்பத்தப்பட்ட நிறைய வேலை இருக்கு அதை kavanikkayum.


RAVIKUMAR KANDASAMY
ஜூலை 04, 2024 11:45

செங்கோல் குறித்து பேசுகிறான்


T.S.SUDARSAN
ஜூலை 04, 2024 11:09

சு. வெங்கடேசன். உன் வெக்கத்தக்கக்கேடான பேச்சு நீ ஒரு உதவாக்கரை என்று நிரூபித்துவிட்டாய் . நாம் என்ன சொல்கிறோம் என்று தன்னை தானே அறிந்து கொண்டு பேசவேண்டும். செங்கோல் என்று ஒன்று அனைவரின் வாழ்விலும் தேவையானது. தெரியவில்லை என்றால் வள்ளுவர் என்ன சொல்லியிருக்கிறார் என்று தெளிவு பத்திக்கொள்ளவேண்டியது மிகமுக்கியம் .


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 04, 2024 10:49

ஸ்டாலின் மேயராக இருந்தபோது கையில் பிடித்திருந்த செங்கோலும் பெண்களை அடிமைப்படுத்தத்தான் என்பதை இப்போதாவது இந்தக் கம்மித் தோழர் ஒப்புக்கொண்டமைக்கு நன்றி.


Anand
ஜூலை 04, 2024 10:46

தன்னை தேர்ந்தெடுத்த தொகுதி மேம்பாடு, அங்குள்ள மக்கள் பிரச்சனை போன்ற அத்தியாவசிய தேவைகளை பற்றி பேசி பெற்று தர வக்கில்லை, செங்கோல் பற்றி பேசுகிறான். இவனை சொல்லி குற்றமில்லை


vbs manian
ஜூலை 04, 2024 10:30

கம்யூனிஸ்டுகள் இந்திய அரசியல் கடலில் மிதக்கும் நுரை. தகுதியில்லாதோர் பலர் பார்லியில் உள்ளனர்.


Kaliraja Thangamani
ஜூலை 04, 2024 09:50

வெங்கடேசன் தமிழர் இல்லை. அவர் மதுரை தொகுதி எம் பி. தான் தவறு செய்து விட்டோம் என்று அறிந்து உடனே உயிர் விட்ட பாண்டியன் நெடுஞ்செழியன் தாங்கி பிடித்து இருந்தது தான் இந்த செங்கோல் என்று தமிழர் அல்லாத இவருக்கு எப்படி தெரியும்? அல்லது அந்த நிகழ்வு நடந்ததது மதுரையில் தான் என்றாவது தெரியுமா?. பாராளுமன்றத்தில் தமிழ் எழுத்து பொறிக்க பட்ட தமிழர் அடையாளம் செங்கோல் இருப்பது தமிழருக்கு பெருமை, இந்த தமிழா அல்லாத மனிதருக்கு அது பிடிக்கவில்லை போலும்.


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ