உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு பள்ளி மாணவர்களுக்கு நவீன தீண்டாமை: முருகன்

அரசு பள்ளி மாணவர்களுக்கு நவீன தீண்டாமை: முருகன்

கோவை: ''மூன்றாவதாக ஒரு மொழி கற்க, தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது நவீன தீண்டாமை,'' என, மத்திய தகவல் ஒளிபரப்பு இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார். கோவை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி:தமிழக அரசு சார்பில், 'தமிழ் தமிழ்' என்று மூச்சுக்கு முந்நுாறு தடவை பேசுகின்றனரே தவிர, தமிழ் வளர்ச்சிக்காக இதுவரை உருப்படியாக எதையுமே செய்யவில்லை. ஆனால், பிரதமர் மோடி செல்லும் இடமெல்லாம் தமிழ் மொழியை உயர்த்திப் பேசுகிறார்.

எதிர்ப்பு

உலகத்திலேயே தமிழ் மொழிதான், மூத்த மொழி என்றும் பழமையான மொழி என்றும் உரக்கச் சொல்லி, தமிழ் மொழியின் பெருமையை விடாமல் பேசுகிறார். இதற்காக ஒவ்வொரு தமிழனும் பெருமைப்பட வேண்டும். மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளியில் படிப்பவர்கள், மூன்று மொழி படிக்கும்போது, சாதாரண அரசு பள்ளி குழந்தைகளுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன்? அரசு பள்ளி மாணவர்களுக்கும் மும்மொழி கற்க வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை. அதை எதிர்ப்பதாகச் சொல்லி, அரசு பள்ளி மாணவர்கள் மும்மொழி கற்க தடை ஏற்படுத்தினால், அது நவீன தீண்டாமை. தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொரு பெற்றோரையும் தனித்தனியே சந்தித்து கேட்டுப் பாருங்கள். ஒவ்வொருவருமே, தங்கள் குழந்தைகள் மும்மொழி படிக்க விரும்புவதை ஆழ்மனதில் இருந்து தெரிவிப்பர்.

அச்சமூட்டும் சூழல்

பத்து ஆண்டுகளாகவே, மகளிர் திறன் மேம்பாட்டுக்காக, பிரதமர் மோடி கடுமையாக உழைத்திருக்கிறார். ஆனால், தமிழகத்தின் நிலை என்ன? பெண்களுக்கு பாதுகாப்பில்லாத அச்சமூட்டும் சூழல் நிலவுகிறது. பாலியல் வன்கொடுமை அதிகம் நடக்கும் மாநிலம் என்ற பெருமைமிகு மாநிலமாக தமிழகம் மாறி உள்ளது. தமிழகத்தில் மீண்டும் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றால், தி.மு.க., அரசு அகற்றப்பட வேண்டும். பா.ஜ., அரசு அமைய வேண்டும். இவ்வாறு முருகன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
மார் 09, 2025 08:17

விளக்கு மாத்துக்கு பட்டு குஞ்சம் கேக்குதா ஓசியிலே பஸ் போறவங்க குழந்தைங்க மும்மொழி கேட்கலாமா. இது நியாயமா. மாசம் ஆயிரம் ரூவா வாங்கீட்டு இருக்கிறவங்க கோடிக்கணக்கில் பணம் போட்டு நடத்தற பள்ளி கூட குழந்தைகளோட போட்டி போடலாமா. காமராஜர் காலத்தில் இரண்டு வேளை சாப்பாடு கிடைச்சது அதுனால காமராஜர் மூணு வேளை சாப்பிடனும்னு மதிய உணவு திட்டம் கொண்டு வந்தார் 60 வருட திராவிட ஆட்சிலே வீடுகளில் இருவேளை உணவு ஒரு வேளையாயிடுச்சு. அதனால தான் இப்ப அரசாங்கம் காலை உணவு கொடுத்து வருது. இதுல வேற மூணு மொழி நாலு மொழின்னு எப்படி கொடுக்கிறது. டீச்சருக்கு சம்பளம் கொடுக்கனும்னா இன்னொரு ஐநூறு டாஸ்மாக் பார் வேற ஓப்பன் பண்ணனும். பரவாயில்லையா.


D.Ambujavalli
மார் 09, 2025 05:53

அது எப்படிங்க ? லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு நாங்கள் நடத்தும் பள்ளிகளில் மூன்று என்ன முப்பது மொழிகள் கூடாக கற்பிப்போம் தர்மாஸ்பத்திரி என்பது போலத் தர்மப்பள்ளிக்கூடத்தில் படிப்பவர்கள் அதையெல்லாம் எதிர்பார்க்கலாமா ? ‘ஒண்ணுமில்லாத வெள்ளாட்டிக்கு கால்பணத்து தாலி போதாதா’?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை