தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்த்து, ரகசிய பயிற்சி அளித்தது தொடர்பாக, ஐந்து மாவட்டங்களில், 10 இடங்களில் சோதனை நடத்திய என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் இரண்டு பேரை கைது செய்துள்ளனர். உலகம் முழுதும், 'கிலாபத்' என்ற, இஸ்லாமிய ஆட்சியை கொண்டு வர, ஹிஸ்ப் உத் தஹ்ரீர் என்ற பயங்கரவாத அமைப்பு, 1953ல் ஜோர்டான் நாட்டில் ஏற்படுத்தப்பட்டது. இந்த அமைப்புக்கு பல நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.மூளைச்சலவைஎனினும், ரகசியமாக செயல்படும் இந்த அமைப்பினர், முஸ்லிம் இளைஞர்களை மூளைச்சலவை செய்து, பயங்கரவாதிகளாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.தமிழகத்தில் இந்த அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்ட சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியர் ஹமீது உசேன், அவரது தந்தை அகமது மன்சூர், இளைய சகோதரர் அப்துல் ரகுமான் ஆகியோர் மே மாதம் கைது செய்யப்பட்டனர்.இவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த, சென்னையை சேர்ந்த முகமது மவுரிஸ், 36, காதர் நவாஸ் ஷெரிப், 35, அகமது அலி உமரி, 46, என்ற மேலும் மூவரும் கைதாகினர். இந்நிலையில், பயங்கரவாத அமைப்புக்கு ஆட்கள் சேர்ப்பு, பயிற்சி அளித்தது தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தொடர் விசாரணை நடத்தி வந்த, என்.ஐ.ஏ., என்ற தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள், தமிழகத்தில் சென்னை, ஈரோடு, தஞ்சாவூர், புதுக்கோட்டை என, ஐந்து மாவட்டங்களில், 10 இடங்களில் நேற்று காலை 5:30 முதல் மாலை 7:30 மணி வரை சோதனை நடத்தினர். சென்னையில் பீர்க்கங்கரணை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, முடிச்சூர் மின்வாரிய காலனியில் வசித்து வரும், கபீர் அகமது, 40, வீட்டில், என்.ஐ.ஏ., - டி.எஸ்.பி., குமரன் தலைமையில் சோதனையில் ஈடுபட்டனர்.தஞ்சாவூர் தஞ்சாவூரில் குழந்தையம்மாள் நகரை சேர்ந்த தனியார் போட்டோகிராபரான அகமது, 36 வீட்டில், டி.எஸ்.பி., ராஜன் தலைமையில் சோதனை நடந்தது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது வீடு முன் முஸ்லிம்கள் குவிந்தனர். எனினும், என்.ஐ.ஏ., அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டனர்.தஞ்சாவூர் மாவட்டம் மானாங்கோரை பகுதியில் ஷேக் அலாவுதீன், 68, வீட்டிலும்; சாலியமங்கலத்தில் பட்டதாரியான அப்துல் ரஹ்மான், 26; மாவு மில் நடத்தி வரும் முஜிபுர் ரஹ்மான், 45, உள்ளிட்டோரின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.ஷேக் அலாவுதீன், அப்துல் ரஹ்மான், முஜிபுர் தொடர்ச்சி 14ம் பக்கம்ரஹ்மான் வீடுகளில், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்த்தது தொடர்பான ஆவணங்கள் சிக்கியுள்ளன. சிம்கார்டு, மொபைல் போன், பென் டிரைவ், ஹார்டு டிஸ்க் என, டிஜிட்டல் ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திருச்சி சுப்பிரமணியபுரத்தில், உறவினர் ஜமால் முகமதுவின் வீட்டில் பதுங்கி இருந்த, அப்துல் ரஹ்மான் மற்றும் முஜிபுர் ரஹ்மான் கைது செய்யப்பட்டனர். புதுக்கோட்டைபுதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தை சேர்ந்தவர் அப்துல்கான் என்ற அப்துல்காதர், 40. அப்பகுதியில், இரண்டு ஆண்டுகளாக பண்ணை வீடு கட்டி வசித்து வருகிறார். அவரது வீட்டிலும் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்தது, ரகசியமாக பயிற்சி அளித்ததற்கு ஆதரமான, துண்டு பிரசுரங்கள், மொபைல் போன், ஹார்டு டிஸ்க் போன்றவற்றை கைப்பற்றினர். ஈரோடுஈரோடு எஸ்.கே.சி.சாலை பகுதியில் வசிப்பவர், முகமது ஈசாக், 45; டூ - வீலர் மெக்கானிக். மனைவி, இரு குழந்தைகளுடன் வசிக்கிறார். கேரளாவில் இருந்து வந்த, என்.ஐ.ஏ., அதிகாரிகள் ஐந்து பேர் அவரது ஈசாக் வீட்டில் சோதனை செய்தனர். முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதால், சென்னையில் உள்ள, என்.ஐ.ஏ., அலுவலகத்தில் இன்று ஆஜராக வேண்டும் என அவருக்கு, 'சம்மன்' வழங்கியுள்ளனர். ஈரோடு செட்டிபாளையம் அசோக் நகரை சேர்ந்தவர் சர்புதீன், 40; போட்டோகிராபர். அண்ணன், அக்கா, அம்மாவுடன் வசிக்கிறார். கருத்து வேறுபாட்டால், குழந்தைகளுடன் மனைவி பிரிந்து சென்று விட்டார். இவரது வீட்டில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் ஐந்து பேர் சோதனையில் ஈடுபட்டனர். பயங்கவாத செயலுக்கான புத்தகம் உள்ளிட்ட ஆவணங்கள் சிக்கியதால் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, அவருக்கும், 'சம்மன்' வழங்கப்பட்டுள்ளது.பாக்ஸ் செய்தி----------------இஸ்லாமிய ஆட்சி குறித்தநுால்கள் வினியோகம் சோதனை குறித்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:தடை செய்யப்பட்ட, ஹிஸ்ப் உத் தஹ்ரீர் அமைப்புக்கு ஆட்களை சேர்த்தது தொடர்பாக, சென்னை, தஞ்சாவூர் உட்பட ஐந்து மாவட்டங்களில், 10 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில், பயங்கரவாத செயலுக்கு பயன்படுத்தப்பட்ட மொபைல் போன்கள், லேப்டாப், சிம்கார்டுகள், மெமரி கார்டுகள், ஹிஸ்ப் உத் தஹ்ரீர் இயக்கம் தொடர்பான சித்தாந்த நுால்கள், கிலாப் என்ற இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்தியே ஆக வேண்டும் என்று, உறுதிமொழி எடுத்தற்கான ஆவணங்கள் சிக்கி உள்ளன. நிதியுதவிகளும் பெற்றுள்ளனர்.இஸ்லாமிய ஆட்சியை மீண்டும் நிறுவ, இந்திய அரசியல் அமைப்பு சட்டம், நீதித்துறை, சட்டம் உள்ளிட்டவைகள் தடையாக உள்ளன. இதை தகர்த்து எறிய வேண்டும் என, ரகசிய வகுப்பில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆவணங்களும் சிக்கி உள்ளன. ஹிஸ்ப் உத் தஹ்ரீர் நிறுவனர், தாகி அல் தின் அல் அல் நபானி எழுதிய, இஸ்லாமிய ஆட்சி குறித்த நுால்களையும் அச்சிட்டு வினியோகம் செய்துள்ளனர்.பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்ப்பது, அவர்களுக்கு ரகசிய வகுப்பில் பயிற்சி அளிப்பது என தீவிரமாக செயல்பட்ட, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த, அப்துல் ரஹ்மான், முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.- நமது நிருபர் குழு -