உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பருப்பு, பாமாயில் இல்லை ரேஷன் கார்டுதாரர்கள் கோபம் 

பருப்பு, பாமாயில் இல்லை ரேஷன் கார்டுதாரர்கள் கோபம் 

சென்னை:ரேஷன் கடைகளில் சிறப்பு பொது வினியோக திட்டத்தின் கீழ், கிலோ துவரம் பருப்பு, 30 ரூபாய்; லிட்டர் பாமாயில், 25 ரூபாய் என்ற குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன. ரேஷனில் வழங்க மாதம், 20,000 டன் பருப்பு, 2 கோடி லிட்டர் பாமாயில் தேவை. இவற்றை, தமிழக நுகர்பொருள் வாணிப கழகம், தனியார் நிறுவனங்களிடம் இருந்து வாங்கி, ரேஷன் கடைகளுக்கு அனுப்புகிறது. கடந்த மாதம் துவரம் பருப்பு, பாமாயில் வாங்காதவர்கள், இம்மாதம் சேர்த்து வாங்கிக் கொள்ளுமாறு அரசு அறிவித்துள்ளது.இம்மாதம் துவங்கி, இரு வாரங்களுக்கு மேலாகிறது. இதுவரை ரேஷன் கடைகளுக்கு, இரு மாதங்களுக்கு உரிய பருப்பு, பாமாயில் முழு அளவில் அனுப்பப்படவில்லை. அதனால், கார்டுதாரர்கள் அவற்றை வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். இது குறித்து ரேஷன் ஊழியர்கள் கூறுகையில், 'இரு மாதங்களுக்கு பருப்பு, பாமாயில் சேர்த்து வாங்கலாம் என, அரசு தரப்பில் கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இம்மாதத்திற்கு தேவையான பொருட்கள் கூட முழுதுமாக அனுப்பவில்லை. இதனால், கார்டுதாரர்கள் எங்களுடன் தகராறு செய்கின்றனர்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை