மேலும் செய்திகள்
வாரிசுகளுக்கு சீட் கேட்டு தி.மு.க., தலைகள் படையெடுப்பு
8 hour(s) ago | 21
திருநெல்வேலி: சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி தொடர்பாக போலீசாரிடமிருந்து தனக்கு சம்மன் எதுவும் வரவில்லை என திருநெல்வேலி பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.திருநெல்வேலியில் நிருபர்களை சந்தித்த அவர் ''சென்னையில் இருப்பது போல திருநெல்வேலியிலும் ஐ.ஐ.டி., கல்வி நிறுவனத்தை கொண்டு வருவேன் என்பன உள்ளிட்ட 25 வாக்குறுதிகளை தொகுதிக்காக அளித்தார்.அப்போது அவரிடம் சென்னை ரயில் நிலையத்தில் பிடிபட்ட நான்கு கோடி ரூபாய் தொடர்பாக போலீசார் சம்மன் அனுப்பியுள்ளதாக வரும் தகவல் குறித்து கேட்டனர். அதற்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன் ''திருநெல்வேலியில் ஏற்கனவே மூன்று அமைச்சர்கள் தங்கி இருந்து தேர்தல் பணியாற்றுகின்றனர்.மற்ற வேட்பாளர்கள் பணியாற்ற விடாமல் கெடுபிடி செய்கின்றனர்.எனக்கு ஒரே நாளில் மூன்று இடங்களில் வாகன சோதனை என கெடுபிடி செய்தனர். பல்வேறு கட்சி அலுவலகங்களிலும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.ஆனால் அவர்கள் யாருக்கும் போலீசார் இதுவரை சம்மன் அனுப்பவில்லை. ஆனால் எனக்கு சம்மன் அனுப்பியதாக கூறிகிறீர்கள். எனக்கு சம்மன் எதுவும் வரவில்லை என்றார்.
8 hour(s) ago | 21