உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஊட்டி, கொடைக்கானலும் மாநகராட்சி ஆகிறது

ஊட்டி, கொடைக்கானலும் மாநகராட்சி ஆகிறது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:நகராட்சி நிர்வாக செயலர் கார்த்திகேயன் கூறியதாவது:ஊட்டி, கொடைக்கானல் ஆகிய சுற்றுலா தலங்களில், அங்கு வசிப்போர் எண்ணிக்கை குறைவு. அதேநேரம், சுற்றுலா பயணியர் வரத்து அதிகமாக இருக்கிறது. அவர்களின் வசதிக்காக உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவது அவசியம். நிர்வாக ரீதியாக தரம் உயர்த்தும் பட்சத்தில், சுற்றுலா தலங்களின் கட்டமைப்பை மேம்படுத்த முடியும்.பழைய விதிப்படி மாநகராட்சியாக தரம் உயர்த்துவதில் சிக்கல் இருந்தது. தற்போது, மாநகராட்சியை தரம் உயர்த்துவதில், மக்கள் தொகை, ஆண்டு வருமானத்துக்கான விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.அதற்கான மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்தால், சட்டசபையில் அறிவிக்கப்பட்ட திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி, புதுக்கோட்டை ஆகியவை தரம் உயர்த்தப்படும். அதேபோல், ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா தலங்களையும் மாநகராட்சியாக தரம் உயர்த்தி, உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

pandit
ஜூலை 04, 2024 11:15

குக்கிராமம் கூட மாநகராக அறிவிப்பார்கள்


தமிழ்வேள்
ஜூலை 04, 2024 11:00

ஏகப்பட்ட மா-நகராட்சிகள் ..அப்புறம் ..தெருவில் மேய்த்துக்கொண்டிருக்கும் எல்லா கரைவேட்டிப்பயல்களும் மேயர்களே ....மேயறவன் மேயர் தானே ? என்ன நான் சொல்றது ?


Indragandhi
ஜூலை 04, 2024 22:14

அருமையான பதிவு


Ravi.S
ஜூலை 04, 2024 10:39

வசதிகள் கூடாது வரிகள் தான் கூடும்


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஜூலை 04, 2024 09:35

இவனுகள இன்னுமா நம்புறீங்க தமிழக மக்களே?


raja
ஜூலை 04, 2024 08:59

சும்மாவா இனி சொத்துவரிய 150 சதம், குடிநீர் வரி குப்பை வரிகளை ஏத்தி தமிழனிடம் இருந்து எவ்வளவு உருவ முடியுமோ அவ்வளவையும் உருவலாமுள்ள...கேடுகெட்ட விடியா திருட்டு திராவிட மாடல் ஆட்சி....


விவசாயி
ஜூலை 04, 2024 08:18

அப்படியே எங்கள் ஊர் கொட்டாம்பட்டி யையும் மாநகராட்சியாக மாற்றும்படி தாழ்மையுடன் கேட்கிறோம், மேலும் அனைத்து ஊராட்சிகளையும் மாநகராட்சியாக மாற்றவும்


Guruvayur Mukundan
ஜூலை 04, 2024 07:22

தமிழ் நாட்டில் உள்ள எல்லா ஊர்களும் படி படியாக மாநகராட்சி யாக மாற்றப்படும். ஆண்டிபட்டி மேயர், உசிலம்பட்டி மேயர், கள்ளக்குறிச்சி மேயர், விருத்தாசலம் மேயர் என்று மாநிலம் முழுவதும் இன்னோவா காரில் வலம் வருவார்கள். பார்த்து ரசிப்பதற்கு ரம்மியமாக இருக்கும்.


Doctor Rajesh
ஜூலை 04, 2024 07:15

விரைவில் திருவாரூர் மாநகராட்சியை எதிர்பார்க்கலாம் ?


pandit
ஜூலை 04, 2024 06:39

வரியை மட்டும் கவனத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு. அதற்கேற்ற கட்டமைப்பு எந்த புதிய மாநகரிலும் செய்யப்படவில்லை.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை