உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆடி பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு

ஆடி பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு

சபரிமலை: ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. நேற்று மாலை 5:00 மணிக்கு மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். தொடர்ந்து பக்தர்களுக்கு திருநீறு பிரசாதமாக வழங்கப்பட்டது. வேறு விசேஷ பூஜைகள் நடைபெறவில்லை. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.இன்று(ஜூலை 16) அதிகாலை 5:00) மணிக்கு நடை திறந்ததும் தந்திரி மகேஷ் மோகனரரு ஐயப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் நடத்தி நெய்யபிஷேகத்தை தொடங்கி வைப்பார். தொடர்ந்து ஜூலை 20 வரை வழக்கமான உஷ பூஜை, களபாபிஷேகம், கலசாபிஷேகம், உச்ச பூஜை, மாலை தீபாராதனை இரவு அத்தாழ பூஜை ஆகியவை நடைபெறும். ஜூலை 20 இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.நேற்று மழை பெய்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி