மேலும் செய்திகள்
போலி மருந்துகள் குறித்து புகாராளிக்க க்யூ ஆர் குறியீடு
26 minutes ago
கழிப்பறைக்கு சென்ற செவிலியர்களையும் வழிமறித்து கைது செய்த போலீஸ்
27 minutes ago | 2
நா.த.க., சார்பில் சவுராஷ்டிரா மாநாடு
35 minutes ago | 2
நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை குறைக்க, போக்சோ உள்ளிட்ட சிறப்பு சட்டங்கள் அமலில் உள்ளன. இவை குறித்த விழிப்புணர்வு இல்லாததால், பல குற்றங் கள் புகார்களாக பதிவு செய்யப்படுவதில்லை. இந்நிலையில், போக்சோ சட்டப்பிரிவுகள் குறித்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன், விழிப்புணர்வு வீடியோக் களை தயாரித்து, யு டியூபில் வெளியிட்டு உள்ளது.இந்த வீடியோக்களை, அனைத்து பள்ளிகளிலும், மன்ற செயல்பாட்டுக்கான நேரத்தில், மாணவ - மாணவியருக்கு காண்பிக்க, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.இதன்படி, 16 வீடியோக்களின் 'லிங்க்' பள்ளிக்கு அனுப்பப்பட்டு, அவற்றை ஆக., 10க்குள், மாணவர்களுக்கு ஒளிபரப்பவும், அதற்கான அறிக்கையை தாக்கல் செய்யவும், பள்ளி தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.- நமது நிருபர் -
26 minutes ago
27 minutes ago | 2
35 minutes ago | 2