உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெட்ரோல் பங்க் விதிகளை தெளிவுபடுத்த உத்தரவு

பெட்ரோல் பங்க் விதிகளை தெளிவுபடுத்த உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : புதிய பெட்ரோல் பங்க் அமைப்பதற்கான தெளிவற்ற விதிகளை தெளிவுபடுத்த வேண்டும் என, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.கோவை மாவட்டம் மதுக்கரை தாலுகா ஒத்தக்கால்மண்டபம் கிராமத்தில், புதிய பெட்ரோல் பங்க் அமைக்க, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளிக்காததை எதிர்த்து, கோவையை சேர்ந்த அய்யாசாமி என்பவர் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.இதை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:நீர்நிலைகளில் இருந்து, 50 மீட்டருக்குள் பெட்ரோல் பங்க் அமைக்கப்பட்டுள்ளதைக் காரணம் காட்டி, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி மறுத்துள்ளது. மருத்துவமனைகள், பள்ளிகள், குடியிருப்பு பகுதியில் இருந்து, 50 மீட்டருக்கு அப்பால் பெட்ரோல் பங்க் இருக்க வேண்டும் என, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகள் கூறுகின்றன. எந்தவொரு சூழலிலும் மருத்துவமனைகள், குடியிருப்புகளில் இருந்து, 30 மீட்டருக்கும் குறைவான தொலைவில் பெட்ரோல் பங்க் இருக்கக்கூடாது என்றும், வாரிய விதிகளில் உள்ளது.ஆறுகள், ஏரிகள், குளங்கள், ஓடைகள், கால்வாய்கள், சதுப்பு நிலங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் இருந்து, 50 மீட்டருக்குள் பெட்ரோல் பங்க் இருக்கக்கூடாது என்று வாரியம் கூறுகிறது. புதிய பெட்ரோல் பங்க் அமைப்பதற்கான தெளிவற்ற விதிகளை, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெளிவுபடுத்த வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை வரும் மே 7ல் நடக்கும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Balamuralitharan
அக் 22, 2024 23:50

புதிய பெட்ரோல் பங்கிற்கும் petrol pump ஓட்டலுக்கும் எவ்வளவு தூரம் வேண்டும். டேங்கில் இருந்து எவ்வளவு தூரம் வேண்டும் மற்றும் காம்போன்டில் இருந்து எவ்வளவு தூரம் வேண்டும்


GMM
ஏப் 14, 2024 08:59

மாசு கட்டுப்பாட்டு வாரிய விதியை கூற வேண்டியது, நகராட்சி, மின் வாரியம், தீயணைப்பு பிரிவு மற்றும் தாலுகா தாசில்தார் பெட்ரோல் பங்க் அமைத்த பின் தான் மாசு புகார் மீது கட்டுப்பாட்டு வாரியம் தலையிட முடியும் மற்றும் தாமிர ஆலை போன்று எதனையும் மூட செய்யும் அதிகாரம் இல்லை பெரிய விபத்து நடந்தால், மத்திய அரசு, மாநில மொத்த நிர்வாகமும் ஒரு மனதாக தீர்மானித்தால், அதன் அடிப்படையில் நீதிமன்றம் மூட உத்தரவிட முடியும் ஊழலுக்கு அதிகாரம் இஷ்டம் போல் செயல்படுகிறது


GMM
ஏப் 14, 2024 08:15

பெட்ரோல் பங்க் சுற்றி ஐம்பது மீட்டர் சுற்றுக்கு எதுவும் இருக்க கூடாது முப்பது மீட்டர் வரை உயர் மின் அழுத்த கம்பி சுற்றி, மயானம் சுற்றி எதுவும் சட்ட பூர்வமாக இருக்க முடியாது


ديفيد رافائيل
ஏப் 14, 2024 13:49

நானே பார்த்து இருக்கேன், மின் மயானம் இருக்கு கோவை ஆத்துப்பாலம் அருகில்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை