உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓட்டுப்பதிவு நாளில் விடுமுறை தர உத்தரவு

ஓட்டுப்பதிவு நாளில் விடுமுறை தர உத்தரவு

சென்னை:'தமிழகத்தில் தேர்தல் அன்று, கட்டுமான தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் விடுப்பு வழங்கப்பட வேண்டும்' என, தொழிலாளர் நலத்துறை கமிஷனர் அதுல் ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: லோக்சபா தேர்தல், 19ம் தேதி நடக்க உள்ளது. தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் பணியாற்றுவோர் முதல், ஒப்பந்த தொழிலாளர் வரை ஓட்டளிக்க வசதியாக, அன்று சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். கட்டுமான தொழில் உள்ளிட்ட, அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் விடுப்பு வழங்குவதோடு, ஒரு நாள் சம்பளமும் வழங்க வேண்டும். தவறும் நிறுவனங்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும். புகார் தர வசதியாக, தொழிலாளர் துறை சார்பில், மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அதுல் ஆனந்த் கூறியுள்ளார்.

தொடர்புக்கு...

மாநில கட்டுப்பாட்டு அலுவலர் - மொபைல் எண் - தொலைபேசி எண் விமலநாதன், தொழிலாளர் இணை ஆணையர் - 94453 98801 - 044 - 2433 5107 வெங்கடாச்சலபதி, தொழிலாளர் உதவி ஆணையர், சென்னை - 70102 75131 - 044 - 2433 0354சுபாஷ் சந்திரன், தொழிலாளர் உதவி ஆணையர், சென்னை - 82206 13777 - 044 - 2432 2749 சிவககுமார், தொழிலாளர் உதவி ஆணையர், சென்னை - 90435 55123 - 044 - 2432 2750


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ