உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் போராட்டம்: துப்பாக்கிச்சூடு

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் போராட்டம்: துப்பாக்கிச்சூடு

புதுடில்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் மக்கள் அரசு நிர்வாகத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு பகுதிகளை பாகிஸ்தான் அரசு நிர்வாகம் நேரடியாக நிர்வகித்து வருகிறது. இங்கு அரசு நிர்வாகம் கடுமையான வரி விதிப்பு, பண வீக்கம், அறிவிக்கப்படாத மின் வெட்டு, மின் பற்றாகுறை ஆகிய காரணங்களாக மக்கள் கடும் அவதியுற்று வருகின்றனர்.இந்நிலையில் நேற்று நேற்று பாகிஸ்தான் அரசு நிர்வாகத்தை கண்டித்து மக்கள் பரவலாக போராட்டம் நடத்தினர். இவர்களை அடக்கி ஒடுக்க போலீசர் ஏ.கே. 47 ரக துப்பாக்கியை காட்டி வானத்தை நோக்கி சுட்டு மிரட்டினர். சில இடங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பபகுதி முழுதும் பதற்றம் காணப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

subramanian
மே 12, 2024 13:33

நம் மக்கள், நம் நாடு அதனால் நம் ராணுவம் விரைந்து சென்று நம் குடிமக்களை பாதுகாக்க வேண்டும் மற்ற நாடுகளை பற்றி கவலைப்படாமல் இதை செய்ய வேண்டும் ஆக்ரமிப்பு பகுதியில் உள்ள மக்கள் அங்கிருந்து வெளியேறி பாரதத்தின் உதவி நாட வேண்டும்


J.V. Iyer
மே 12, 2024 04:04

போர்கிஸ்தான் போல, இந்த போர்க் பன்றிகள் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி மக்களை இந்தியா தூண்டினால் ரணகளமாகிவிடும் அது இல்லாமலே போராட்டம் நடக்கிறது பலே


R Kay
மே 12, 2024 00:59

காஷ்மீர் மக்கள் இத்தகைய செய்திகளை படித்த பின்னராவது தாய்நாட்டிற்கு உண்மையுள்ளவர்களாக இருக்க சபதமேற்றால் நல்லது கலகத்தை தூண்டிவிட்டு நமக்குள் மோதவிட்டு குளிர்காயும் அந்நிய சக்திகளின் வலையில் வீழ்ந்து வாழ்வை தொலைக்காமல் இருத்தல் நலம்


Kasimani Baskaran
மே 12, 2024 00:47

சிதையும் நிலையில் பாகிஸ்தான் இருக்கிறது என்றால் அது மிகையாகாது


K.Muthuraj
மே 12, 2024 09:51

இருக்கலாம் பாகிஸ்தான் சிதைந்தால், நமக்கு என்னவோ சிதைந்த நாடுகளாலும் உபத்திரவம் தான் கூடும்


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி