உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தலைமை நீதிபதிக்கு ஓய்வூதியர்கள் தபால்

தலைமை நீதிபதிக்கு ஓய்வூதியர்கள் தபால்

சென்னை:அகவிலைப்படி உயர்வு வழக்கை விரைவுபடுத்தக் கோரி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு போக்குவரத்து ஓய்வூதியர்கள் தபால் அனுப்பி வருகின்றனர். இதுவரை, 3,000க்கும் மேற்பட்ட பதிவு தபால்கள் அனுப்பி உள்ளனர்.இது குறித்து, அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கத் தலைவர் கதிரேசன் கூறியதாவது:அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களில் பெரும்பாலானோருக்கு, 10,000 ரூபாய்க்கு குறைவாகவே ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அத்துடன் வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வை, 2015 நவம்பர் முதல் அரசு நிறுத்தி விட்டது.இது தொடர்பாக, பல்வேறு போராட்டங்களை நடத்தியும், அரசு கண்டுகொள்ளவில்லை. இந்த விவகாரத்தில், ஓய்வூதியர் நல சங்கங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கும் நிலுவையில் உள்ளது.அதை விரைவுபடுத்தக் கோரி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பதிவு தபால் மற்றும் இ - மெயில் வாயிலாக கடிதம் அனுப்பி வருகிறோம். இதுவரை, 3,000க்கும் மேற்பட்ட பதிவு தபால்களை அனுப்பி உள்ளோம். வரும் 10ம் தேதிக்குள் 10,000 பதிவு தபால்களை அனுப்ப திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ