உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சொந்த ஊரை மறந்து விடாதீர்கள் விஜய பிரபாகரனிடம் மக்கள் கோரிக்கை

சொந்த ஊரை மறந்து விடாதீர்கள் விஜய பிரபாகரனிடம் மக்கள் கோரிக்கை

அருப்புக்கோட்டை: ''சொந்த ஊரை மறந்து விடாதீர்கள். விஜயகாந்தை போல் எங்களுக்கும் நல்லதைச் செய்யுங்கள் ''என தே.மு.தி.க.,வேட்பாளர் விஜய பிரபாகரனிடம் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே விஜயகாந்த் சொந்த ஊரான ராமானுஜபுரத்தில் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.விஜய பிரபாகரன் நேற்று ராமானுஜபுரத்திற்கு சென்றார். அங்குள்ள பிள்ளையார் கோயில், பெருமாள் கோயிலில் தரிசனம் செய்தார். பின்னர் ஊர் மக்களிடம் நலம் விசாரித்தார். 'இதுதான் விஜயகாந்த் பிறந்த ஊர் . உங்கள் சொந்த ஊரையும், எங்களையும் மறந்து விடாதீர்கள். விஜயகாந்தை போல் எங்களுக்கும் நல்லதைச் செய்யுங்கள்' என அவர்கள் கூறினர்.விஜய பிரபாகரன் நிருபர்களிடம் கூறியதாவது :விருதுநகரில் பிரசாரத்தை துவக்க உள்ளேன். அதற்காக சொந்த ஊரான ராமானுஜபுரம் வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு மக்களை சந்தித்தேன். நான் வெற்றி பெற்றால் குறைகளை நிவர்த்தி செய்வேன். இது வாய் வார்த்தை அல்ல. விஜயகாந்தின் பெயருக்கு களங்கம் விளைவிக்காமல் 100 சதவீதம் உழைக்க தயாராக இருக்கிறேன். இந்த மக்களுக்காக நிச்சயம் என்னுடைய குரல் லோக்சபாவில் ஒலிக்கும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை