மேலும் செய்திகள்
ஆரியங்காவில் நாளை: ஆரியங்காவில் நாளை
4 hour(s) ago
சபரிமலையில் நாளை: சபரிமலையில் நாளை
4 hour(s) ago
அ.தி.மு.க.,விடம் 40 தொகுதிகள் கேட்கிறது பா.ஜ.,!
5 hour(s) ago | 2
சிவகங்கை: சிவகங்கையில் நேற்று முன்தினம் இரவு பா.ஜ., கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளர் செல்வக்குமாரை 52, முகத்தை சிதைத்து மர்ம நபர்கள் கொலை செய்தனர். கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி அவரது உடலை வாங்க மறுத்து மறியல் நடந்தது.சிவகங்கை அருகே வேலாங்குளத்தில் செங்கல் சூளை நடத்தி வந்தவர் செல்வக்குமார். நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு செங்கல்சூளையில் இருந்து வீட்டிற்கு டூவீலரில் சென்றபோது சாத்தரசன்கோட்டை மெயின் ரோட்டில் இவரை வழிமறித்த 3 பேர் வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் முகத்தை சிதைத்து கொலை செய்தனர்.இதையடுத்து கொலையாளிகளை கைது செய்யக்கோரி கிராமத்தினர் இளையான்குடி ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். நடவடிக்கை எடுப்பதாக சிவகங்கை எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ் உறுதியளித்ததால் மறியலை கைவிட்டனர். செல்வக்குமார் உடல் சிவகங்கை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் அவரது உடலை வாங்க மறுத்து நேற்று காலை மானாமதுரை ரோட்டில் பா.ஜ., மாவட்ட தலைவர் சத்தியநாதன் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். கொலையாளிகளை கைது செய்துவிடுவோம் என டி.எஸ்.பி., சிபிசாய் சவுந்தர்யன் உறுதி அளித்ததால் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் உடலை பெற்றுக்கொண்டனர். கொலை செய்தது யார், காரணம் என்ன என சிவகங்கை தாலுகா இன்ஸ்பெக்டர் மணிகண்டன் விசாரித்து வருகிறார்.
4 hour(s) ago
4 hour(s) ago
5 hour(s) ago | 2