மேலும் செய்திகள்
தும்பிக்கை இழந்த யானையிடம் பாசத்தை காட்டி அசத்திய தாய்
3 hour(s) ago
அரசியல் கூட்டங்களில் நெரிசலை தவிர்க்க... வருகிறது தீர்வு
4 hour(s) ago
முன்னாள் அமைச்சர் மீதான ஐந்து வழக்குகள் ரத்து
5 hour(s) ago
கரூர்:கரூரை சேர்ந்த, பிரியாணி கடை அதிபர் கிருஷ்ணன் என்பவரிடம், பண மோசடி செய்ததாக, கைது செய்யப்பட்ட விக்னேஷ் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கரூர் டவுன் போலீசார் யு டியூபர் சவுக்கு சங்கர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.சென்னை புழல் சிறையில் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கரை கடந்த, 8ல் கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர். நேற்று முன்தினம் கரூர் நீதி மன்றத்தில் சவுக்கு சங்கரை ஆஜர்ப்படுத்தி, நான்கு நாள் காவலில் விசாரிக்க, கரூர் டவுன் போலீசார் அழைத்து சென்றனர்.தற்போது, வாங்கல் போலீஸ் ஸ்டேஷனில் யு டியூபர் சவுக்கு சங்கரிடம், கரூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர். கரூர் போலீசார் கூறியதாவது:கடந்தாண்டு மே மாதம், கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் மற்றும் அவர்களது ஆதரவாளர்களின் வீடுகளில், அமலாக்கத் துறை, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதுகுறித்து, சவுக்கு சங்கர் யு டியூப் சேனலில் பேசியிருந்தார். மேலும், செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார், மனைவி நிர்மலா பெயரில் கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலை ராம் நகரில் கட்டி வரும், புதிய வீட்டின் முன், சவுக்கு சங்கர் நின்று செல்பி எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார். அது வைரலானது. இதுபோன்ற சம்பவங்களுக்கு, கரூரை சேர்ந்த அ.தி.மு.க., நிர்வாகிகள் யாராவது உதவி செய்தார்களா எனவும், தி.மு.க.,வினர் குறித்து அவர் வெளியிட்ட வீடியோ பேட்டிகள், விக்னேஷின் பண மோசடி வழக்கு குறித்தும் விசாரித்தனர். இவ்வாறு கூறினர்.
3 hour(s) ago
4 hour(s) ago
5 hour(s) ago