உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை கடலில் மாசு ஒழிப்பு ஒத்திகை

சென்னை கடலில் மாசு ஒழிப்பு ஒத்திகை

சென்னை:சென்னை கடலில் மாசு ஒழிப்பு ஒத்திகை நடந்தது.இந்திய கடலோர காவல்படை, மண்டல அளவிலான மாசு ஒழிப்பு ஒத்திகை பயிற்சியை மூன்று நாட்கள் நடத்த முடிவு செய்தது.அதன்படி, சென்னை துறைமுகம், எண்ணெய் மாசு அகற்றும் நிறுவனங்கள், மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம், சென்னை மாநகராட்சி ஆகியவற்றுடன் இணைந்து, மூன்று நாள் ஒத்திகையை நேற்று முன்தினம் துவக்கியது. முதல் நாள் மாசு ஒழிப்பு குறித்த விவாதம் நடந்தது. நேற்று கடலில் எண்ணெய் மாசு ஏற்பட்டால், அதை அகற்றுவது குறித்த ஒத்திகை நடந்தது.இதில், கடலோர காவல்படை, பாதுகாப்பு கப்பல்கள், ஹெலிகாப்டர்கள், விமானங்கள், சென்னை துறைமுக கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டன.இறுதி ஒத்திகை, இன்று காலை 6:00 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் நடக்க உள்ளது. கடலில் மாசு ஏற்பட்டால், அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்படுவதற்காக, இந்த ஒத்திகை பயிற்சி நடத்தப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ