உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காலேஜெல்லாம் கஷ்டம் என்கிறார் பொன்முடி

காலேஜெல்லாம் கஷ்டம் என்கிறார் பொன்முடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அரசு கல்லுாரிகள் அமைக்க தேவைப்படும் நிலம், செலவு குறித்த விபரங்களை, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சட்டசபையில் விவரித்தார்.சட்டசபையில் அவரது பதிலுரை:புதுமைப்பெண் திட்டம் வாயிலாக, உயர்கல்வியில் மாணவியர் சேர்க்கை அதிகரித்துள்ளது. உதாரணத்திற்கு, சென்னை மாநில கல்லுாரியில், கடந்தாண்டு, 37 சதவீதமாக இருந்த மாணவியர் சேர்க்கை, நடப்பாண்டு, 47 சதவீதமாக அதிகரித்துள்ளது. அரசு மற்றும் கலை அறிவியல் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை, 20 சதவீதம் அதிகரித்துள்ளது.மாநிலத்தில், அரசு, அரசு உதவி, சுயநிதி என, 1,626 கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், 3.64 லட்சம் பேர் படிக்கின்றனர். அனைத்து எம்.எல்.ஏ.,க்களும், தங்கள் தொகுதிக்கு அரசு கல்லுாரி வேண்டும் என்று கேட்கின்றனர். ஒரு கல்லுாரி அமைப்பது சாதாரணமான விஷயம் அல்ல. அதற்கு மாநகராட்சி பகுதியாக இருந்தால், 2 ஏக்கர்; நகர பகுதியாக இருந்தால், 3 ஏக்கர்; கிராமப்புறமாக இருந்தால், 5 ஏக்கர் நிலம் தேவை. அதுமட்டுமின்றி, கட்டடம் கட்ட, 20 கோடி ரூபாயை அரசு ஒதுக்க வேண்டும். ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு சம்பளம் வழங்குவதற்கு, தொடர் செலவினமாக ஆண்டுக்கு, 3.50 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும்.அதையெல்லாம் கணக்கில் வைத்து முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். எந்த தொகுதியில் அரசு கல்லுாரி இல்லையோ; அந்த தொகுதியில், கல்லுாரி அமைக்கலாம் என, முதல்வர் கூறியுள்ளார். எனவே, எம்.எல்.ஏ.,க்களின் கோரிக்கைகள், முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, நிதிநிலைக்கு ஏற்ப அறிவிக்கப்படும்.சுயநிதி கல்லுாரிகள் அமைக்க நிலம் மட்டுமின்றி, 25 கோடி ரூபாயை அரசிடம் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால், கல்லுாரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Ashanmugam
ஜூன் 25, 2024 22:11

கோடி கோடியாக லஞ்சம் கமிஷன் மூலம் கொள்ளை அடித்து பதுக்கி வைத்துள்ள கள்ள பணத்தை செலவழித்து தமிழக மாணவ மாணவிகளின் கல்வி கண்ணை திறந்து வையுங்கள்? 25 கோடி, 3.5 கோடி பட்ஜெட் எல்லாம் உங்க லெவலுக்கு ஜுஜுபி. ஆனால், உயிருடன் இருக்கும் நல்லதை தமிழக மாணவ மாணவி சமுதாயத்திற்கு செய்து நீங்கா புகழ் பெற்று இறைவனடி சேரலாம் மற்றபடி ஜெயா அம்மா, மக்கள் திலகம் எம்ஜியார் சொத்துகளை போல் நாதியாக போய்விடும். பிறகு எவனோ அனுபவித்துக்கொண்டு இருப்பான்?


Raa
ஜூன் 25, 2024 18:03

தங்களை வைத்துக்கொண்டு வேறு என்ன எதிர்பார்க்கலாம்.


Raa
ஜூன் 25, 2024 18:03

தங்களை வைத்துக்கொண்டு வேறு என்ன எதிர்பார்க்கலாம்.


Masi Arumugam
ஜூன் 25, 2024 14:55

ஒட்டு போடும் போது தெரியாதா யார் எப்படி என்று


தமிழ்வேள்
ஜூன் 25, 2024 12:15

செம்மண்ணுன்னா டக்குன்னு அள்ளலாம் ...டாஸ்மாக்குன்னா டக் டக் னு திறக்கலாம் ..காலேஜ் எல்லாம் வேலைக்கு ஆகுமா ? தமிழனுக்கு தேவையா ? அவசியமா ? திராவிட கும்பலுக்கு அடிமைகள் உடனடியாக எங்கே கிடைப்பார்களோ, அதற்கான வேலைகள் மட்டுமே நடக்கும் ....அண்ணாதுரை காட்டிய கண்ணியமான வழி...டாஸ்மாக்கும் , மணல் கொள்ளையும் ...தற்போது போதை மருந்தும் கள்ளச்சாராயமும் ....


theruvasagan
ஜூன் 25, 2024 10:05

காலேஜ் கட்டுறதல்லாம் நமக்கு கட்டுபடியாகுங்களா. கடல்ல பேனா சிலை நிறுத்தணும். ஊருக்கு ஊரு முக்குக்கு முக்கு சிலைகள் நிறுவணும். இதுக்கே எத்தனை ஆயிரம் கோடிகள் செலவாகும்னு யோசிச்சுப் பாருங்க. அத்த விடுங்க கள்ளச்சாராய மரணங்களுக்கு தலா பத்து லட்சம் கொடுத்து கொடுத்தே கஜானா காலியிடும் போல இருக்கே. கல்நெஞ்சுக்கார ஒன்றிய அரசுக்கு மாநில அரசின் இப்படிப்பட்ட நிதிச்சுமைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமே இல்லை பாருங்க.


ஆரூர் ரங்
ஜூன் 25, 2024 09:29

அப்படியே எதிர்கால உடன்பிறப்புகளை உருவாக்க ரூட் தல ஊக்க உரிமைத் தொகை அளிக்கும் திட்டம் உண்டா? வரவர சில அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் என்றாலே மாநகரம் அலறுகிறது .


ramani
ஜூன் 25, 2024 08:15

காலேஜ் எல்லாம் வேண்டாங்க. கள்ள சாராயம் குடித்து சாவறவனுக்கு பத்து லட்சம் ரூபாய் தரணும். நிதி இல்லாமல் போயிட போவுது


தவசி
ஜூன் 25, 2024 07:51

கள்ளச்சாரச்யம்.குடிச்சு செத்தவங்களுக்கு தலா பத்து லட்சம் அள்ளிக்.கொடுக்க பணம் கொட்டிக்.கிடக்கும். படிப்பு எதுக்கு? படிச்சவன் இவிங்களுக்கு ஓட்டுப் போடுவானா?


raja
ஜூன் 25, 2024 07:50

ஆமா மூணு கோடி அரசால் ஒதுக்க முடியாது தமிழன் படிக்க ஆனா கட்டுமர சிலைக்கும் பெனாவுக்கும் 80 கோடி ஒதுக்கும்... கேடுகெட்ட இளிபிறவிகள் ஓய்ந்த ஒன்கொள் மாடல் திருட்டு திராவிடர்கள்...


மேலும் செய்திகள்