உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துணைமின் நிலையங்களில் ஓய்வுபெற்ற பணியாளர்கள் தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு

துணைமின் நிலையங்களில் ஓய்வுபெற்ற பணியாளர்கள் தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு

சென்னை:சென்னையில் மின் வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானியை சந்தித்த, தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழுவினர், துணைமின் நிலையங்களில் ஓய்வு பெற்ற பணியாளர்களை நியமனம் செய்வதை தவிர்ப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.இதுகுறித்து, கூட்டுக்குழு சார்பாக, மின்வாரிய தொழிலாளர், பொறியாளர் ஐக்கிய சங்க பொதுச் செயலர் சுப்ரமணியன் கூறியதாவது: மின்வாரியத்தில், 50,000க்கும் மேற்பட்ட காலியிடங்களால், தற்போது பணிபுரிவோருக்கு அதிக பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. துணைமின் நிலையங்களில் ஓய்வுபெற்ற பணியாளர்கள் ஒரு நாளைக்கு, 1,000 ரூபாய் ஊதியத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். மிக முக்கியமான அந்த பணியை, ஓய்வு பெற்றவர்களால் திறம்பட கவனிக்க இயலாது. எனவே, காலியிடங்களை விரைந்து நிரப்புமாறும், ஓய்வு பெற்றவர்களை நியமிப்பதை திரும்பப் பெறுமாறும், வாரியத் தலைவரிடம், 13 தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தினோம்.கோரிக்கைகள் குறித்து விவாதித்து தீர்வு காண, ஆக., 1ம் தேதி மாலை, 3:00 மணிக்கு சிறப்பு கூட்டம் ஏற்பாடு செய்வதாக, ராஜேஷ் லக்கானி உறுதி அளித்தார்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை