மேலும் செய்திகள்
மதுரை மாணவி முதலிடம்
52 minutes ago
கூடலுார் : முல்லைப் பெரியாறு அணையில் தொடர்ந்து பெய்து வந்த மழை நேற்று குறைந்தது. அதே வேளையில் தமிழகப் பகுதிக்கு நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பில் கடந்த 10 தினங்களுக்கு மேலாக தொடர்ந்து கன மழை பெய்தது. இதனால் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி 128.05 அடியானது (மொத்த உயரம் 152 அடி). அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3122 கன அடியாக இருந்தது. நீர் இருப்பு 4276 மில்லியன் கன அடியாகும். பெரியாறில் 8 மி.மீ., தேக்கடியில் 2.2 மி.மீ., மழை பதிவானது. தமிழகப் பகுதிக்கு குடிநீர் மற்றும் முதல் போக நெல் சாகுபடிக்காக நீர் திறப்பு வினாடிக்கு 1267 கன அடியில் இருந்து 1400 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.நேற்று பகல் முழுவதும் மேகமூட்டத்துடன் இருந்த போதிலும் மழை பெய்யவில்லை.நீர் திறப்பு அதிகரிப்பால் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பெரியாறு நீர் மின் நிலையத்தில் தலா 42 மெகாவாட் வீதம் 3 ஜெனரேட்டர்களில் 126 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
52 minutes ago