உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரெட்டியார் சமூகம் குறித்து குறைவாக பேசவில்லை: ராஜகண்ணப்பன் விளக்கம்

ரெட்டியார் சமூகம் குறித்து குறைவாக பேசவில்லை: ராஜகண்ணப்பன் விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சட்டசபையில், கடந்த 25ம் தேதி மாலை, மானிய கோரிக்கை விவாதத்திற்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் பதில் அளித்த போது, அமைச்சர் நேரு, சபாநாயகர் அப்பாவு குறித்து கூறிய சில கருத்துகள், சபைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன.ஆனால், அவரது பேச்சு நேரடியாக ஒளிபரப்பானதால், ரெட்டியார் சமுதாயம் குறித்து தவறாக பேசியதாக தகவல் பரவியது.இது தொடர்பாக, நேற்று அமைச்சர் ராஜகண்ணப்பன், சட்டசபையில் அளித்த விளக்கம்:சட்டசபையில் அன்று பேசும் போது, ரெட்டியார் சமூகம் குறித்து பேசியதாக, தவறாக எடுத்துக் கொண்டுள்ளனர். எந்த சமூகம் குறித்தும் குறிப்பாக பேசவில்லை. அவர்கள் தங்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்க வேண்டும் என்று கேட்டுள்ளனர்.முதல்வருடன் கலந்து பேசி அறிவிப்பு வெளியிடப்படும். எந்த சமுதாயம் குறித்தும், குறிப்பாக ரெட்டியார் சமூகம் குறித்து, நான் குறைவாக எதுவும் பேசவில்லை. சமுதாய பிரச்னையில் நாம் போகக்கூடாது என்பதில், அரசு உறுதியாக உள்ளது.நாம் அனைவரும் ஒன்று என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். நான் சமுதாயம் குறித்து பேசியதாக, யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.சபாநாயகர் அப்பாவு: ஏற்கனவே அமைச்சர் கூறியதை, சபைக்குறிப்பில் இருந்து நீக்கி விட்டேன். அமைச்சர்கள் பதிலுரை நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அமைச்சர் பேசிய வார்த்தைகள், சமூக வலைதளங்களில் பரவின. அந்த வார்த்தை மனம் புண்படும்படி இருக்கும். யாருடைய மனதையும் புண்படுத்த நினைக்கவில்லை என்று கூறுங்கள்.அமைச்சர் ராஜகண்ணப்பன்: ஜாதி, பேதமற்ற சமுதாயம் என்பதே நம் கொள்கை. யாருடைய மனதையும் புண்படுத்துவது கிடையாது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Rvn
ஜூன் 28, 2024 10:55

இது தான் அவர்களுடைய சமூக நீதி


Raa
ஜூன் 28, 2024 10:54

நீங்கயெல்லாம் எல்லாம் பேசலாம். யாருக்கும் சுயமரியாதை இல்லை. காசை வாங்கி வோட்டு போடுவர்களுக்கு அது இருக்க வாய்ப்பே இல்லை.


Mettai* Tamil
ஜூன் 28, 2024 10:50

ரெட்டியார் சமூகம் தங்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். சமூக நீதிக்கு வயது 60.


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 28, 2024 10:46

வேற யாராவது பேசியிருந்தா ????


mindum vasantham
ஜூன் 28, 2024 10:15

ரெட்டியார் சமூகம் அவர்கள் ஊரிலே பொது பிரிவு இங்கே எதற்கு பிற்படுத்த பட்ட பிரிவு


Svs Yaadum oore
ஜூன் 28, 2024 10:14

இவர் எப்படி அமைச்சராக இன்னும் தொடர அனுமதிக்கிறார்கள் என்று கேள்வி? இது புரியாத புதிராம் ...இதில் புதிர் என்ன இருக்குது?? ஜாதிதான் ....விடியல் சும்மாவா மந்திரி பதவி குடுக்கும்?? ...இல்லை என்றால் ஜாதி வோட்டு விழுமா ??....


Jysenn
ஜூன் 28, 2024 09:46

Someone very big has lost control over the activities of his slaves.


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஜூன் 28, 2024 09:40

தேவைப்பட்டால் சாதியை சொல்லுவதும் அதை பயன்படுத்திக் கொள்வதும் இல்லையென்றால் போலி சமூகநீதி பேசுவதும் திருட்டு திராவிடத்தின் இயல்பு. சமூக நீதி பேசி மக்களை கொள்ளையடிப்பது ஒன்றே அவர்களின் நோக்கம். இதை தெரிந்தும் இன்றைக்கு மக்கள் சுய லாபங்களுக்காக இதை அனுமதிக்க ஆரம்பித்துவிட்டனர். திராவிடம் 100 ரூபாய் திருடினால் அதில் 30 ரூபாய் நாம் எடுத்துக் கொள்ளலாம் என்று மக்களையும் மாற்றி விட்டனர். இது அபாயமானது. இங்கே கோலோச்சும் தெலுங்கு ரெட்டியார்கள் ஆந்திராவில் தமிழன் அரசியலில் முன்னேற அனுமதிப்பார்களா?


Svs Yaadum oore
ஜூன் 28, 2024 10:24

கோலோச்சுவது என்பது ஜாதி பெயரை சொல்லி பதவி வாங்கும் மந்திரிகளோடு சரி ...எல்லா ஜாதியிலும் மிக பெரும்பாலானோர் ஏழை மக்கள். ஜாதி இட ஒதுக்கீடு அனுபவிப்பதும் அந்தந்த ஜாதி பணக்கார மக்களே ...ஒரே ஜாதியில் ஒரே குடும்பத்தில் ஐந்து பேருக்கு இட ஒதுக்கீடு அரசு வேலை ....எந்த ஜாதி சமூகம் என்றாலும் ஏழை மக்கள் குரல் எப்போதும் திராவிட சமூக நீதிக்கு எட்டாது ....அதற்குத்தான் டாஸ்மாக்.....


எஸ் எஸ்
ஜூன் 28, 2024 09:08

ஆனால் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை பற்றி யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசலாம். கேட்பார் இல்லை. திமுக வின் ராஜிவ் காந்தி என்ற பேர்வழி 50 ஆண்டுகள் முன்பே இன அழிப்பு செய்து இருக்க வேண்டும் என்றும் தமிழன் பிரசன்னா என்ற பேர்வழி நூலிபான் என்றும் விமர்சனம் செய்தனர். அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?


M L SRINIVASAN
ஜூன் 28, 2024 11:23

"காலி " பான் பேச்சுக்கு " வேலி " பான் போடமுடியாது . அவர்கள் " கூலி " பான் கு மாரடிப்பவர்கள் .


R Bramananthan
ஜூன் 28, 2024 08:58

90% ரெட்டியார்கள் மிகவும் கஷ்டமான நிலையில் தான் வாழ்கிறார்கள். இதுதான் உண்மை


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ