உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2,500 கோவில்களுக்கு திருப்பணி நிதியுதவி

2,500 கோவில்களுக்கு திருப்பணி நிதியுதவி

சென்னை:ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், 1,250 கிராமப்புற கோவில்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பகுதியில் உள்ள, 1,250 கோவில்கள் ஆகியவற்றில் திருப்பணி செய்ய, தலா இரண்டு லட்சம் ரூபாய் வீதம், 50 கோடி ரூபாய்க்கான வரைவோலைகளை, முதல்வர் ஸ்டாலின் நேற்று கோவில் நிர்வாகிகள் மற்றும் பூசாரிகளிடம் வழங்கினார்.முதல்வர் தலைமையில், கடந்த பிப்., 27ல் நடந்த அறநிலையத் துறை ஆலோசனைக் கூட்டத்தில், கோவில் திருப்பணிக்கு வழங்கப்படும் இரண்டு லட்சம் ரூபாயை, 2.50 லட்சம் ரூபாயாக உயர்த்த, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தேசிய விருது

தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் கூட்டமைப்பு சார்பில், 2022 - 23ம் ஆண்டு பருவத்தில், ஒட்டுமொத்த செயல் திறனுக்கான முதல் பரிசுக்கான விருது, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கிடைத்துள்ளது. சிறந்த நிதி மேலாண்மைக்குரிய முதல் பரிசுக்கான விருது, கள்ளக்குறிச்சி - 2 கூட்டுறவு சர்க்கரை ஆலை பெற்றுள்ளது. இவ்விருதுகளை, அமைச்சர் பன்னீர்செல்வம் நேற்று தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார்.

சர்க்கரை ஆலைகளுக்குதேசிய விருது

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்