மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
1 hour(s) ago | 1
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
11 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
12 hour(s) ago
திண்டுக்கல்:சபரிமலையில் தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என்ற திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவிப்பிற்கு ஐயப்ப சேவா சமாஜம் கண்டனம் தெரிவித்துள்ளதோடு போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்துள்ளது.திண்டுக்கல்லில் அதன் தேசிய பொதுச்செயலாளர் ராஜன் கூறியதாவது:கார்த்திகை, மார்கழியில் சபரிமலைக்கு தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி என்ற அறிவிப்புக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். அந்த இருமாதங்களில் மட்டும் 1.50 கோடி பேர் சபரிமலை வந்து செல்லும் நிலையில் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகள் விதித்தால் அப்போது 48 லட்சம் பக்தர்கள் மட்டுமே சபரிமலை செல்ல முடியும்.பக்தர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி கொடுப்பதே தேவசம் போர்டு பணி. ஆனால் வருவாய்க்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் நிர்வாகம் பக்தர்களின் நலன், அடிப்படை வசதி குறித்து கவலைப்படுவதில்லை. சன்னிதானத்தில் 18 படிகளின் மேல் அமைக்கப்பட்டுள்ள கூரையால் நெருக்கடி ஏற்படுகிறது. கூரையை அகற்ற வேண்டும்.நிலக்கல்- பம்பை இடையே இலவச பஸ்கள் இயக்க பல்வேறு அமைப்புகள் தயாராக உள்ளன. இதற்கு கேரள அரசு அனுமதி அளிக்க வேண்டும். பெருவழிப் பாதை வழியாகவும், தொலைதுாரத்திலிருந்து பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கும் தரிசனத்தில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.தினம் 80ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி என்ற கட்டுப்பாடுகளை நீக்காதபட்சத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். பக்தர்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்படும். சேவை அமைப்புகளை வெளியேற்றி விட்டு சபரிமலையை கேரள அரசு கையகப்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். இது தொடர்பாக பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலினையும் சந்தித்துபேச உள்ளோம் என்றார்.
1 hour(s) ago | 1
11 hour(s) ago | 1
12 hour(s) ago