உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டாஸ்மாக் மது விற்பனையால் அரசுக்கு ரூ.45,856 கோடி வருவாய்

டாஸ்மாக் மது விற்பனையால் அரசுக்கு ரூ.45,856 கோடி வருவாய்

சென்னை : தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், 4,829 கடைகள் வாயிலாக மதுபான வகைகளை விற்பனை செய்கிறது. மது வகை மீது விதிக்கப்படும் ஆயத்தீர்வை மற்றும் மதிப்புக் கூட்டு வரி வாயிலாக, அரசுக்கு வருவாய் கிடைக்கிறது.அதன்படி, 2023 - 24ல் ஆயத்தீர்வை வாயிலாக, 10,774.28 கோடி ரூபாய்; மதிப்புக் கூட்டு வரியாக, 35,081.39 கோடி ரூபாய் என, மொத்தம், 45,856 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக, தமிழக அரசின் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இது, 2022 - 23ல், 44,121.13 கோடி ரூபாயாகவும், 2021 - 22ல், 36,050.65 கோடி ரூபாயாகவும் இருந்தது. மது கடைகளை ஆய்வு செய்ய, தமிழக மின் ஆளுமை முகமை வாயிலாக, ஆய்வு செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த செயலியை, டாஸ்மாக் மேலாளர்கள், பறக்கும் படை அதிகாரிகள், கலால் உதவி ஆணையர்கள் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்துள்ளனர்.ஆய்வின் போது ஊழியர்கள் வருகை, சரக்கு இருப்பு, விலை பட்டியல், கண்காணிப்பு கேமரா இயக்கம், கடைகளில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் குறித்த ஆய்வு குறிப்பு உள்ளிட்டவை செயலியில் பதிவு செய்யப்படும். கடந்த ஆண்டில் கள்ளச்சாராயம் தொடர்பாக, 12,431 வழக்குகள் பதியப்பட்டு, 12,422 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும், 4.64 லட்சம் லிட்டர் கள்ளச்சாராயம் அழிக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

S Sivakumar
ஜூன் 22, 2024 18:45

"குடி குடியை கெடுக்கும்" என்ற வாசகம் தப்பாக்கிய இந்த அரசு டாஸ்மாக் தான் நடத்தி தான் அரசு நடத்த முடியும் என்ற நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


venugopal s
ஜூன் 22, 2024 13:34

தமிழ்நாட்டின் மொத்த வருமானம் 2023-24 ல் 270000கோடி ரூபாய். அதில் டாஸ்மாக் மூலமான வருமானம் 17% க்கும் குறைவு தான். அதனால் தமிழக அரசு மற்ற வரி வருமானத்தை கூட்டி டாஸ்மாக் கடைகளை ஒவ்வொரு வருடமும் குறைத்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வேறு வழி வகைகளில் தேடுவது நல்லது.


Indian
ஜூன் 22, 2024 12:08

நல்ல விஷயம் ...இரண்டு லச்சம் கோடிக்கு சாராயம் விற்றால் நல்லது ........நாடு வளர்ச்சி அடையும் ..


raja
ஜூன் 22, 2024 11:53

கள்ளகுறிச்சியில் செத்து மடிகிறான்..... இங்கே டாஸ்மாக் விற்பனை ஜோராகா நடக்கிறது நல்லா வரும் தமிழகம் கனவு கானுவோம் இந்தியா வல்லரசா ஆகும்


Sampath Kumar
ஜூன் 22, 2024 10:18

நல்ல விஷயம் இதன் ஓலம் பல அல்ல திட்டங்களை அரசு செய்து வருகின்றது பாராட்டுக்கள்


ஆரூர் ரங்
ஜூன் 22, 2024 11:04

ஆம் . குடிகாரர்கள் வீடுகளில் கேட்கும் மரண ஓலம். ஏழைகளை குடிக்க வைத்து சேர்த்த பாவப் பணத்தில் நல்லது நடக்குமா?


sridhar
ஜூன் 22, 2024 08:36

டாஸ்மாக் விலை அதிகம் என்றால் கள்ளச்சாராயம் தரப்படும், அது தவிர கஞ்சாவும் கிடைக்கும், வளர்ச்சியை நோக்கி தமிழகம்.


Bala
ஜூன் 22, 2024 08:19

கள்ள சாராயத்தால் கட்சியினருக்கு எவ்வளவு?


R Kay
ஜூன் 22, 2024 08:10

இதுவல்லவோ பரமபரை மன்னராட்சி விடியல் அரசின் சாதனை


duruvasar
ஜூன் 22, 2024 08:04

சென்ற பட்ஜெட்டில் கூறப்பட்ட 50000 கொடி இலக்கை ஏன் எட்டமுடியவில்லை என்பதை ஆராய்ந்து நடவடிக்கைகள் எடுக்க ஒரு குழு அமைத்து 20 நாளில் அறிக்கை சமர்ப்பிக்க முதல்வர் ஸ்டாலின் அய்யா துரித நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசு ஊழியர்களின் ஊதியத்தை நிறுத்திவைக்க முடியாது.


VENKATASUBRAMANIAN
ஜூன் 22, 2024 07:49

மீதி பாதி பாராமன்ற தேர்தலுக்கு பயன் பட்டுள்ளது. திமுகவின் திராவிட மாடல் இதுதான்


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ