உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வளைவில் மூடப்படாத பள்ளத்தால் ஆபத்து

வளைவில் மூடப்படாத பள்ளத்தால் ஆபத்து

வீரபாண்டி: ஆட்டையாம்பட்டியில் இருந்து, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வழியாக மாமூண்டி செல்லும் சாலை குறுகலாக இருப்பதால், ஒரே நேரத்தில் எதிர் எதிரே வரும் வாகனங்கள் கடக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தனர்.அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறை சார்பில் எட்டு மாதங்களுக்கு முன்பு, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே மேட்டுக்கடை அங்கன்வாடி மையத்தில் இருந்து, சேலம் மாவட்ட எல்லை நல்லாகவுண்டம்பட்டி வரை, ஒன்றரை கி.மீ., துாரத்துக்கு சாலை விரிவாக்கம் செய்யும் பணிகளை துவக்கியது. பகுதி பகுதியாக ஆமை வேகத்தில் நடந்து வரும் பணிகள், பள்ளம் தோண்டி ஒரு மாதத்துக்கு பின்பு தான் ஜல்லிக்கற்களை கொட்டி மூடி வருகின்றனர். மேட்டுக்காடு, அங்கன்வாடி மையம் அருகே மூன்று சாலை சந்திப்பு அபாய வளைவில் தோண்டிய பள்ளம், இரண்டு மாதங்களுக்கு மேலாக மூடப்படாமல் கிடக்கிறது. அடுத்த வாரம் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், திறந்து கிடக்கும் பள்ளத்தில் பாதசாரிகள், மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மட்டுமன்றி அருகிலுள்ள அங்கன்வாடி மையத்துக்கு வரும் குழந்தைகள், அவர்களின் பெற்றோர் கவிழ்ந்து விபத்து நடக்கும் ஆபத்து உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உடனடியாக பள்ளத்தை மூடி சமன் செய்து, புதிதாக தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ