உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரவுடி நாகேந்திரன் சிறையில் அடைப்பு

ரவுடி நாகேந்திரன் சிறையில் அடைப்பு

சென்னை:ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்ட ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.வேலுார் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டுள்ள ரவுடி நாகேந்திரனை, பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தனிப்படை போலீசார் கைது செய்து, நான்கு நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.அதேபோல, அவரது மகனும், இளைஞர் காங்., நிர்வாகியாக இருந்த அஸ்வத்தாமனை கைது செய்தும், மூன்று நாள் காவலில் விசாரித்தனர்.அதற்கான விசாரணை முடிந்து, இருவரையும் சென்னை எழும்பூரில் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் ஜெகதீசன் முன் நேற்று ஆஜர்படுத்தினர். அப்போது, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அஸ்வத்தாமனை, ஆக. 21ம் தேதி; நாகேந்திரனை, 28 வரையில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.நாகேந்திரன் வேலுாரிலும், அஸ்வத்தாமன் பூந்தமல்லி சிறையிலும் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை