உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆர்.எஸ்.எஸ்., பயிற்சி முகாம் துவக்கம்

ஆர்.எஸ்.எஸ்., பயிற்சி முகாம் துவக்கம்

சென்னை:ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின், 20 நாள் பயிற்சி முகாம், திருச்சியில் துவங்கியது.ஆர்.எஸ்.எஸ்.,சில் பயிற்சி முகாம்கள் என்பது முக்கியமானது. தற்போது, பயிற்சி முகாம்களில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மூன்று நாட்கள் அறிமுக பயிற்சி முகாம், ஏழு நாட்கள் ஆரம்ப நிலை, 15 நாட்கள் முதலாம் ஆண்டு பயிற்சி முகாம், 20 மற்றும் 25 நாட்கள் கார்யகர்த்தர்கள் மேம்பாட்டு முகாம்கள் என, மாற்றப்பட்டுள்ளன.தமிழகம், கேரளாவில் லோக்சபா தேர்தல் முடிந்துள்ள நிலையில், கார்யகர்த்தர்கள் மேம்பாட்டு முகாம் திருச்சியில் நேற்று முன்தினம் துவங்கியது. இதில், கேரளாவிலிருந்து 99 பேர், தமிழகத்திலிருந்து, 70 பேர் என மொத்தம் 169 பேர் பங்கேற்றுள்ளனர். முகாமை கொச்சி மாநகர் ஆர்.எஸ்.எஸ்., இணை தலைவர் டாக்டர் கிருஷ்ணகுமார் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். ஆர்.எஸ்.எஸ்., தமிழக அமைப்பாளர் ஆறுமுகம் துவக்க உரையாற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ