உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாரம்பரிய நெல் விதைகள் மானிய விலையில் விற்பனை

பாரம்பரிய நெல் விதைகள் மானிய விலையில் விற்பனை

சென்னை:வேளாண் விரிவாக்க மையங்களில், 50 சதவீத மானியத்தில் மாப்பிள்ளை சம்பா உள்ளிட்ட பாரம்பரிய நெல் விதைகள் விற்பனை துவங்கியுள்ளது.இதுகுறித்து, வேளாண் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:மாப்பிள்ளை சம்பா, சீவன் சம்பா, காட்டுயானம், துாயமல்லி உள்ளிட்ட பாரம்பரிய நெல் விதைகள், விவசாயிகளின் விதைப் பண்ணைகளிலிருந்து வேளாண் விரிவாக்க மையங்களுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. ஒரு கிலோ பாரம்பரிய விதை நெல், 50 ரூபாய். இது 50 சதவீத மானியத்தில் 25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு ஏக்கரில் நடவு செய்து சாகுபடி செய்ய, 20 கிலோ வரையும், நேரடி நெல் விதைப்புக்கு 5 கிலோ விதை நெல்லும் தேவைப்படும். தேவையுள்ள விவசாயிகள் வேளாண் விரிவாக்க மையங்கள், துணை விரிவாக்க மையங்களை அணுகலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி