உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சண்டாளர் என்பது ஜாதி பெயர்: பொதுவெளியில் பயன்படுத்த தடை

சண்டாளர் என்பது ஜாதி பெயர்: பொதுவெளியில் பயன்படுத்த தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'சண்டாளர்' என்ற ஜாதி பெயரை பயன்படுத்த, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் தடை விதித்துள்ளது. மீறி பயன்படுத்துவோர் மீது, எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:இந்தியாவில் ஒவ்வொரு ஜாதிக்கும் சூட்டப்பட்டுள்ள பெயர்கள், சமூக மதிப்பையும், அவமதிப்பையும் சுட்டுவதாக இருக்கின்றன. பெயர் இழிவாக இருப்பதாகக் கருதும் ஜாதிகள், அப்பெயரை மாற்றுவதும், அதற்கு அரசு ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிடுவதும் தொடர்ந்து நடக்கின்றன.பிணங்களை அடக்கம் செய்தல் போன்ற பணிகளை செய்யும் சமூக குழுக்களை, இழிவான பெயர்களில் அழைப்பதும், அரசியல் மேடைகளில் பிறரை வசைபாட பயன்படுத்துவதும் உண்டு. கலை, இலக்கியங்கள், திரைப்பட நகைச்சுவை காட்சிகள், திரைப்பட பாடல்களில் பயன்படுத்துவதும் பரவலாக நடக்கின்றன. இவை, அப்பெயர்களில் உள்ள மக்களையும், அவர்களை போன்ற மக்களையும் புண்படுத்தும் செயல். இவை சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்ற எண்ணமும் மக்களிடம் இல்லை. தமிழகத்தின் சில பகுதிகளிலும், இந்தியாவிலும், 'சண்டாளர்' என்ற பெயரில் மக்கள் இருக்கின்றனர். தமிழகத்தில் பட்டியலின ஜாதியினர் அட்டவணையில், இப்பெயர் 48வது இடத்தில் உள்ளது. பிறரை இழிவுபடுத்தும் நோக்கில் இப்பெயர், பொதுவெளியிலும், சமூக ஊடகங்களிலும் அழுத்தமாக பேசப்படுவதை காண முடிகிறது. எனவே, இழிவுபடுத்தும் நோக்கத்திலோ, நகைச்சுவையாகவோ, அரசியல் மேடைகளிலோ, சண்டாளர் என்ற சொல்லை பயன்படுத்தக்கூடாது.அவ்வாறு பயன்படுத்துவோர் மீது பட்டியலினத்தோர், பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு ஆணையம் பரிந்துரைக்கிறது.இவ்வாறு அதில் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 46 )

karutthu
ஜூலை 22, 2024 13:06

அப்போ ப்ராமண ஜாதியை ... என்று கூறுவதையும் பொது வெளியில் பயன்படுத்த தடை விதிப்பீர்களா? நிறைய பேர்கள் அப்படித்தானே கூப்பிடுகிறார்கள்


MR Professor
ஜூலை 22, 2024 03:33

அந்தக் குறிப்பிட்ட வார்த்தை கந்த சஷ்டி கவசத்தில் வருகிறது. கந்த சஷ்டி கவசத்தை இயற்றியது பால தேவ ராய சுவாமிகள். திருமூலர் அந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறார். பால தேவ ராய சுவாமிகள் மீதும், திருமூலரின் மீதும் இந்த அரசு வழக்குப்போடட்டும் ....


Lion Drsekar
ஜூலை 20, 2024 13:55

பாராட்டுக்கள் அதே நேரத்தில் ஒரு ஜாதியின் பெயரை , மதத்தின் பெயரை பல தலைமுறைகளாக இவ்வளவுதான் என்றில்லாமல் அவ்வளவு கீழ்த்தரமாக பேசுவதும். அந்த சமூகத்துக்கு எதிராக ஒவ்வொரு இலைகளிலும் செயல்படுவதும் உலகத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதே ?இதற்க்கு இயற்க்கை மட்டுமே பதில் சொல்லவேண்டிய ஒரு நிலை. வந்தே மாதரம்


Peterraj Jayakumar
ஜூலை 19, 2024 20:14

Sathigal illaiyadi pappa entru padapatta tamilagathil sathiyai vaithu arasial cheyyum sandalsrgal oliyum varai india uruppadathi Etta thal vu needikkum kiramathil sandalar entral throgigal entru arutham ippadi chandai iduvathsivida Indian tamilan ena anpodu kooralam


Mohanakrishnan
ஜூலை 18, 2024 16:52

திருட்டு மாடல் தெளிவு படுத்த வேண்டும்.


S Regurathi Pandian
ஜூலை 18, 2024 10:03

இப்படி ஒரு ஜாதி இருப்பதே இப்போதுதான் ஆட்சியாளர்களுக்கு தெரியுமா? இந்த ஜாதி பெயரை மட்டும்தான் பொதுவெளியில் பேசக்கூடாதா? அரசியல்வாதிகள் ஜாதி மேடைகளில் பங்கேற்கின்றனர் அதுவும் பொதுவெளியில்தானே நடைபெறுகிறது. பள்ளிக்கூடங்களுக்கு ஜாதி பெயர்கள் உள்ளனவே இவையெல்லாம் ஆட்சியாளர்களுக்கு அதிகாரிகளுக்கு theriyaathaa?


sundarsvpr
ஜூலை 17, 2024 09:33

வீட்டில் உறவினரை தீரும்போது சண்டாளத்தனம் செய்திடாதே என்று திட்டலாம். இது சட்ட விரோதம் இருக்காது. தெருவில் மேடையில் உரத்தக்குரலில் பேசக்கூடாது. வீதியில் இருவர் இடையே பேசும்போது இது ஜாதியை குறிப்பிடுவதாக கருதக்கூடாது. சண்டால பயலே என்று கூறினால் ஜாதியை குறிக்கும். சண்டாளத்தனம் செய்யாதே என்று கூறினால் ஒரு செய்கையை குறிப்பிடும் சொல் . நாம் தமிழர் கட்சி இது தொடர்பாக நீதிமன்றத்தை அணுகுவது சரியாய் இருக்கும்


Godyes
ஜூலை 16, 2024 23:52

பராசக்தியின் கோர்ட் சீனில் நீதிபதி கண்ணதாசனை பார்த்து குற்றவாளி கூண்டில் நிற்கும் சிவாஜி கணேசன் கோர்ட் என்றும் பாராமல் கோப வெறியில் சண்டை போடுவது போல் வாதிடுகிறார்.அதற்கு என்ன பெயர்


Godyes
ஜூலை 16, 2024 23:45

அடேய் குப்பண்ணன் வேறு குப்பண்ணா வேறா


shakti
ஜூலை 16, 2024 22:35

அப்போ வி . எஸ் . ராகவன் குரலில் மிமிக்ரி செய்வோரின் பிழைப்பு அம்புட்டுத்தானா ??? அவருடைய சிறப்பு அம்சமே அதுதானே ???


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை