மேலும் செய்திகள்
தோட்டக்கலை துறை போராட்டம் வாபஸ்
27 minutes ago
ஆவண எழுத்தர் உதவியின்றி நேரடியாக பத்திரம் பதியலாம்
40 minutes ago
மார்கழி வழிபாடு:திருப்பாவை- பாடல் 22
1 hour(s) ago
சென்னை:தமிழகத்தில், மதுரை உள்பட மூன்று இடங்களில் நேற்று, 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. வரும், 15ம் தேதி வரை இதே நிலை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நேற்று மாலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக, மதுரை விமான நிலையத்தில், 40 டிகிரி செல்ஷியஸ், அதாவது, 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. மதுரை, 39; கரூர் பரமத்தி, துாத்துக்குடி, 38 டிகிரி செல்ஷியஸ் என, 3 இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் நிலவியது.ஈரோடு, பாளையங்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, 37; வேலுார், 34; சென்னை, 33; கோவை, தர்மபுரி, 32; கன்னியாகுமரி, 31; கொடைக்கானல், 22; ஊட்டி, 18 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது.
27 minutes ago
40 minutes ago
1 hour(s) ago