சிலைகள் முன் செல்பி
↓கண்காட்சியில் முருகக் கடவுளின் ஓவியக் காட்சி, முருகனின் பெருமைகள் கூறும் பாடல் 3டி திரையரங்கில் காட்சிப்படுத்தப்பட்டது ↓மாநாட்டுக்கு வந்தவர்கள் கண்காட்சியில் உள்ள சிலைகள், ஓவியங்கள் முன்பு 'செல்பி' எடுத்துக் கொண்டனர். ஆதினங்களிடமும் ஆசிகள் பெற்றனர் ↓மாநாடு மருத்துவ வளாகத்தில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோயாளிகள் பரிசோதனை செய்து கொண்டனர். யுனானி, சித்தா, ஆயுர்வேத, அலோபதி மருந்துகளும் வழங்கப்பட்டன ↓மாநாட்டில் பங்கேற்ற அனைவருக்கும் மூன்று வேளை உணவு வழங்கப்பட்டது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தது ↓முருகன் கோவில், இடும்பன் மலை, திருஆவினன்குடி கோவில்கள், மாநாடு நடைபெறும் கல்லுாரி வளாகம், மின்விளக்குகளால் ஜொலித்தது ↓மாநாட்டு பணிகளுக்கு ஆயிரக்கணக்கான அரசு, கோவில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். கோவில் கட்டுப்பாட்டில் உள்ள கல்லுாரி மாணவர்களும் சீருடையுடன் பணியில் ஈடுபட்டனர். ↓பழனியில் முருகன் மாநாடு முதல் நிகழ்ச்சியாக ஆதி பெருமக்கள் விளக்கேற்றிட, ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் மாநாட்டுக் கொடியை ஏற்றி வைத்தார் ↓'உலகளாவிய உயர்வேலன்' எனும் தலைப்பில் கருத்தரங்கம், சொற்பொழிவாளர் சுகிசிவம் தலைமையில் 'முந்து தமிழ்' என்ற தலைப்பில் சிந்தனை மேடை, கந்தன் அனுபூதி பாடல்கள், தியாவின் இசை நிகழ்ச்சி, அறுபடை வீட்டின் நாட்டிய நிகழ்ச்சி, ஆன்மிக பாடகர் வீரமணி ராஜு குழுவினரின் பக்தி இசை நடந்தது ↓மாலையில் ஓய்வுபெற்ற நீதிபதி சொக்கலிங்கம் தலைமையில், 'அடியார்க்கு அருளும் அழகன்' என்ற தலைப்பில் கருத்தரங்கம், சுதா ரகுநாதன், ஊர்மிளா சத்திய நாராயணன் உள்ளிட்டோரின் இசை, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.