உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறையில் இருந்து வெளியே பேசுகிறார் செந்தில்பாலாஜி

சிறையில் இருந்து வெளியே பேசுகிறார் செந்தில்பாலாஜி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கரூர் : '' சென்னை புழல் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மொபைல் போன் வாயிலாக வெளியில் இருப்போரிடம் பேசி வருகிறார்,'' என, யு டியூபர் சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் கரிகாலன் தெரிவித்தார்.கரூரில் அவர் அளித்த பேட்டி: கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில், யு டியூபர் சவுக்கு சங்கர் மீது, ஆன்லைன் மூலம் பண மோசடி செய்தார் என விக்னேஷ் என்பவரிடம் பொய்யான வாக்குமூலம் பெற்று, வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதற்காக, நான்கு நாள் போலீஸ் காவல் பெற்றுள்ளனர். இதற்காக, சவுக்கு சங்கரை நேற்று முன்தினம் இரவே, சென்னை புழல் சிறையில் இருந்து அழைத்து வந்து, கரூர் கிளை சிறையில் அடைத்தனர். சவுக்கு சங்கருக்கு சிறையில் சர்க்கரை நோய்க்கான மருந்துகளும், உணவும் தருவது இல்லை. உரிய பணம் செலுத்தியும், சிறையில் அவருக்கு நாளிதழ்கள் தருவதில்லை. சென்னை புழல் சிறை மருத்துவமனையை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, 'கெஸ்ட் ஹவுஸ்' போல் பயன்படுத்தி வருவதாக, சவுக்கு சங்கர் என்னிடம் கூறினார். இரவு நேரத்தில், அனைத்து கைதிகளையும் அறையில் அடைத்து விட்டு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை, வாக்கிங் செல்ல அனுமதிக்கின்றனர். மேலும், செந்தில் பாலாஜி சிறையிலிருந்து வெளியில் இருப்போரிடம் செல்போன் வாயிலாக பேசி வருகிறார் என்றும் சங்கர் கூறினார். இவ்வாறு கரிகாலன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

pv, முத்தூர்
ஜூலை 10, 2024 16:18

அவர் ஜெயின் உள்ளே எல்லாவற்றையும் பெறுகிறார், ஏன் ஜாமீன் தேவை. Note down the point your Honour. அவர் சிறையில் இருந்தாலும் மத்திய தேர்தலில் அவர் வேட்பாளர் தேர்வில் ஒரு பகுதியாக இருந்தார் மற்றும் ராஜ்குமார்


V RAMASWAMY
ஜூலை 10, 2024 15:32

இந்த விடியல் ஆட்சி, திராவிட மாடல், சமத்துவம், சமூக நீதி சனாதன ஒழிப்பு, இவையெல்லாம் பல போர்வைகள், உள்ளே, லஞ்சம், கொள்ளை, இன்ன பிற.


venugopal s
ஜூலை 10, 2024 15:20

பணம் கொடுத்தால் இந்தியாவில் உள்ள எல்லா சிறைச்சாலைகளிலும் என்ன வசதி வேண்டும் என்றாலும் கிடைக்கும்!


subramanian
ஜூலை 10, 2024 14:56

சாதாரண நாலாம் தர கைதிக்கே பணம் கொடுத்து எல்லாம் கிடைக்கும். இவன் ஆளும் கட்சி முன்னாள் அமைச்சர், கணக்கிற்கு சிறையில் இருக்கிறார். மற்றபடி அவருக்கு வீடும், சிறையும் ஒன்றுதான்.


Mariappan
ஜூலை 10, 2024 13:55

He is in puzhal Jail not as other prisoners but as govt gust


Elanchezhiyan Elanchezhiyan
ஜூலை 10, 2024 13:01

பெங்களூரு ஜெயில்ல ஒருதவுங்க ஷாப்பிங் போனாங்க அது எல்லாம் நாபாகம் இருக்கா இது மாதிரி சொல்லிகிட்டே போகலாம் பணம் பத்தும் செய்யும்


Sampath Kumar
ஜூலை 10, 2024 12:02

அப்புறம் ஏம்புட்டு நேரம் அவரு சுவற்றுக்கிட பேசுவாரு அதன் அப்படி ஒரு சேஞ்சுக்கு வெளியே பேசுகிறார் அதுக்கு எல்லா ஏற்படும் ஜெயிலர் பண்ணிகொடுப்பாரு அந்த ஜெயலறி உங்க லால் என்ன செய்யமுடியும்


Jayamathi Sharma
ஜூலை 10, 2024 11:57

இது முற்றிலும் சரி. ஆவடி மருத்துவமனையில் கால்மணி நேரம் இருந்தால் அங்கு வுள்ள நர்ஸ்கள், வார்டு பாய்ஸ், கிளெர்க்ஸ் , எல்லோரும் நோயாளிகளிடம் நாய்களை நடத்துவது போல நடத்துகின்றனர். அரட்டை அடித்துக்கொண்டு வோவ்வொரு ஓ பி சிட் கொடுக்க பத்து நிமிடங்களுக்கு மேல் எடுக்கிரார்கள்.


Velan
ஜூலை 10, 2024 08:59

திஹர் போயிக்கனும் என்ன. அமலாக்க என்ன ஐடியோ எல்லாம் நாடகம்


VENKATASUBRAMANIAN
ஜூலை 10, 2024 08:33

இவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ