மேலும் செய்திகள்
ரூ.3 லட்சத்துக்கு புங்கனுார் காளை மாடு
4 minutes ago
அரசு மருத்துவமனைகளில் ‛தியாகச்சுவர் அமைகிறது
17 minutes ago
வந்தே பாரத் ரயில் மீது கல்வீசி தாக்கி அட்டூழியம்
25 minutes ago
சென்னை : எல்ஜிபிகியூஏ பிளஸ்' என்ற தன் பாலின ஈர்ப்பு, எதிர் பாலின ஈர்ப்பு உள்ளிட்ட சமூகத்தினரின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் ஊடகங்களில் கண்ணியமாக குறிப்பிடுதல் தொடர்பான சொல்லகராதி தயாரிப்பு குறித்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன், விசாரணையில் உள்ளது.இந்த வழக்கு, நேற்று நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சமூக நலத்துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன் சார்பில், தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா நிலை அறிக்கை தாக்கல் செய்தார். அதன் விபரம்:சமூக நலத்துறை அதிகாரிகள், திருநங்கையர், 'எல்ஜிபிகியூஏ பிளஸ்' சமூகம், திருநங்கையர் நல ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோருடன், மண்டல அளவில ஆலோசனை கூட்டம், கடந்த பிப்ரவரியில் விழுப்புரம், திருச்சி, கோவை, மதுரை நகரங்களில் நடந்தது.அதில், கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு; திருநங்கையருக்கான பிரத்யேக கொள்கை வகுக்கப்பட வேண்டும் என்ற, பிரதான கோரிக்கை எழுப்பப்பட்டது. மேலும், திருநங்கையருக்கு என தனி கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும் என, திருநங்கையர் நல வாரிய உறுப்பினர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.திருநங்கையருக்கான மாநில கொள்கையின் ஆங்கில வரைவு, மே 15ல் அரசிடம் வழங்கப்பட்டுள்ளது. அந்த ஆங்கில வரைவு கொள்கை, அரசால் அங்கீகரிக்கப்பட்டவுடன், தமிழ் மொழிபெயர்ப்பு இறுதி செய்யப்படும்.திருநங்கையர் தவிர்த்து, 'எல்ஜிபிகியூஏ பிளஸ்' எனும் தன் பாலின, இரு பாலீர்ப்பு, ஒரு பாலீர்ப்பு மற்றும் பால் புதுமையர் சமூகத்துக்கான வரைவு கொள்கையை திருத்துவதற்கான நடவடிக்கை நடந்து வருகிறது; இதை இறுதி செய்ய, மூன்று மாதம் அவகாசம் வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
4 minutes ago
17 minutes ago
25 minutes ago