உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எழுபது நெருக்கமான தோழர்கள் : துணுக்கு

எழுபது நெருக்கமான தோழர்கள் : துணுக்கு

இயேசுநாதருக்கு, 12 சீடர்கள் இருந்ததுபோல நபிகள் நாயகத்திற்கு 70 நெருக்கமான தோழர்கள் இருந்தனர். அவர்களில் நபிகள் நாயகத்தின் இதயத்துக்கு நெருக்கமாக இருந்தவர் கருப்பின அடிமையாக இருந்த பிலால் இப்னு ரபாஹ்(ரலி) ஆவார். (கி.பி.580 - 640) பூர்வீகம் அபிசினியா. மக்காவில் பிறந்தார். தந்தை ரபாஹ் அல் ஹபாஷி. தாய் ஹமாமா. அடிமை இனத்திலிருந்து முதன்முதலாக இஸ்லாத்தை தழுவியவர் பிலாலி. உலகின் முதல் பள்ளிவாசலில் நின்று 'பாங்கு' கூறிய முதல் மனிதர் பிலால். தினம் இரண்டு கோடி பாங்கழைப்புகள் உலகம் முழுக்க எழுப்பப்படுவதற்கான முன்னோடி பிலாலே.இறையச்சத்தைக் கொண்டல்லாது மனிதருக்கு வேறெந்த வழியிலும் மேன்மையோ, சிறப்போ கிடையாது என்பதற்கான உதாரணம் பிலால் ரலி.நபிகள் நாயகம் மரணத்துக்குப் பின் டமாஸ்கஸ் நகரில் வாழ்ந்த பிலால்(ரலி) இரு திருமணங்கள் செய்து கொண்டார். குழந்தைகள் இல்லை. தன் 70வது வயதில் இறந்த அவர் பாபுஸ் ஸகீர் கோட்டை வாயிலின் அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.நபித்தோழர் பிலால் (ரலி) - ஏ.ஹெச். யாசிர் அரபாத் ஹசனி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ