உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராகுல் முதலீடு செய்த பங்குகள் சமூக வலைதளங்களில் விவாதம்

ராகுல் முதலீடு செய்த பங்குகள் சமூக வலைதளங்களில் விவாதம்

கோவை:கேரள வயநாடு தொகுதியில் காங்., மூத்த தலைவர் ராகுல் போட்டியிடும் நிலையில், அவரது சொத்து விவரம் வெளியாகியுள்ளது. அவரது பிரமாணப் பத்திரத்தில் இருந்து, ராகுல் எந்தெந்த நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளார்; மியூச்சுவல் பண்ட் முதலீடுகள் என்னென்ன என்பதை அறிந்துகொள்ள சமூக வலைத்தளவாசிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.ராகுலின் அசையும், அசையா சொத்துகளின் மொத்த மதிப்பு 20.38 கோடி ரூபாயாக உள்ளது. இதில், பங்குச்சந்தை சார்ந்த முதலீடு மட்டும் 8 கோடி ரூபாய்க்கும் அதிகம்.ராகுல், ஏசியன் பெயின்ட்ஸ், பஜாஜ் பைனான்ஸ், ஐ.டி.சி., டாடா, இன்போசிஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர் உள்ளிட்ட, 25 நிறுவன பங்குகளை 4.33 கோடி ரூபாய் மதிப்பில் வைத்துள்ளார்.ஹெச்.டி.எப்.சி., - ஐ.சி.ஐ.சி.ஐ., உள்ளிட்ட 5 மியூச்சுவல் பண்ட் முதலீடுகளில் 3.81 கோடி ரூபாய் உள்ளது. மேலும், சாவரின் கோல்டு பாண்டுகளில் 15.2 லட்சம், பி.பி.எப்., முதலீடாக 61.52 லட்சம் ரூபாய் வைத்துள்ளார்.இந்த விவரங்களை, சமூக வலைத்தளங்களில் பகிரும் நெட்டிசன்கள், ராகுல் எந்தெந்த நிறுவனங்களின் பங்குகளை வாங்கியுள்ளார், எந்த பங்கு வளர்ச்சியில் உள்ளது, சேமிப்பு முதலீடுகள் என்ன, தாங்களும் அதில் முதலீடு செய்துள்ளோமா என்பது குறித்து, சுவாரஸ்யமாக விவாதித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ஆரூர் ரங்
ஏப் 06, 2024 12:41

இதற்குப் பெயர்தான் (போலி)கார்பரேட் எதிர்ப்பு. இதிலுள்ள சில கார்பரேட் நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கியவை.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை