உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மலையையே கடத்தும் போது அரிசி கடத்தல் பெரியதல்ல

மலையையே கடத்தும் போது அரிசி கடத்தல் பெரியதல்ல

துாத்துக்குடி:''கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையையே கடத்துகின்றனர்; அரிசி கடத்தல் பெரிதல்ல,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.துாத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் போதைப்பொருட்கள் புழக்கம் சர்வ சாதாரணமாகி விட்டது. எட்டு கோடி தமிழர்களும், தங்கள் குழந்தைகள் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி விடுவார்களோ என்று அச்சப்படத் துவங்கி உள்ளனர். இதற்கு காரணம் தி.மு.க., அரசு தான்.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, அரிசி கடத்தல் நடக்கிறது. அதை தடுத்தாக வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து, கனிமவள கடத்தல் நடந்து வருகிறது.இன்னும் சில ஆண்டுகளில் மேற்கு தொடர்ச்சி மலையே இல்லாமல், மண்ணோடு மண்ணாகிவிடும். மலையையே கடத்துகின்றனர்; அரிசி கடத்தல் பெரியதல்ல.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி