உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இதுவரை பறக்கும் படை ரூ.101 கோடி பறிமுதல்

இதுவரை பறக்கும் படை ரூ.101 கோடி பறிமுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில், தேர்தல் பறக்கும் படையால், 101 கோடி ரூபாய் மதிப்பிலான, பணம், தங்கம், மதுபானம் மற்றும் இலவச பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில், ஏப்., 19ல் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதால், வாக்காளர்களுக்கு பணபட்டுவாடா செய்வதை தவிர்க்கும் வகையில், 50,000 ரூபாய்க்கு மேல் உரிய ஆவணமின்றி எடுத்து செல்லும் பணம், பரிசுப் பொருட்களை, தேர்தல் பறக்கும் படையினர் கண்காணித்து வருகின்றனர்.அதன்படி, தமிழகம் முழுதும் நேற்று காலை, 9:00 மணி வரை, 43.64 கோடி ரூபாய் ரொக்கம், 2.17 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள்; 61 லட்ச ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள்; 54.29 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி பொருட்கள்; 1.09 கோடி மதிப்பிலான இலவச பொருட்கள் என, 101.82 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

தத்வமசி
மார் 30, 2024 23:19

முக்கிய வேட்பாளர்களை இந்த வீரர்கள் தொடுவதில்லை அப்பாவி மக்களை மட்டும் படுத்தும் பாட்டினாலேயே இவ்வளவு என்றால், வேட்பாளர்களின் வண்டிகளையும், அதை தொடர்ந்து வரும் வண்டிகளையும் சோதனை செய்தால் கட்டாயம் ஆயிரம் கோடியை தமிழகத்திலேயே தாண்டும்


RAMAKRISHNAN NATESAN
மார் 30, 2024 21:12

டீம்காவிடம் இருக்கும் அளவுக்கு வேறெந்த கட்சியிடமும் ஹவாலா பணம் இல்லை வாளுக ஜாப்பரு பாயி


ram
மார் 30, 2024 14:38

பாமரமக்களோட வண்டிகளை மட்டுமே புடிச்சு பாவம் அவங்க பொழப்புக்காகவும் மருத்துவமனைக்காகவும் கொண்டு போற பணத்தை புடிச்சு கணக்கு காட்டுரீங்களே.. ஆளும் கட்சி அசியல்வாதிங்க காரை புடிச்சு எத்தைனை கோடி எடுத்தீங்க... நீங்க நேர்மையா அரசியல்வாதிங்க காரை புடிச்சு சோதனை செய்திருந்தை உங்களோட கலக்சன் 1000 கோடியை தான்டியிருக்கும்...


வணக்கம்.Rajamohan
மார் 30, 2024 12:20

இதில் ஒரு அரசியல்வாதியின் பணம்கூட இருக்காது. எல்லாம் உழைத்து பிழைக்கும் பொதுமக்களின் பணமாகத்தான் இருக்கும்.


ரஞ்சித்
மார் 30, 2024 08:10

அத்தனையும் அரசியல் சம்மந்தப்பட்டது மட்டுமா? பொது மக்களின் வைத்தெரிசலுமா


குமரி குருவி
மார் 30, 2024 07:57

பேங்க் வாசல் ஏ.டி.எம்.வாசலில் நின்றால் இன்னும் நிறைய ..இவர்கள் வீரம் அரசியல் வாதிகள் முன் அடங்கிய போவதுதான் கடமையா..?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை