உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உரிமை பறிபோகிற விஷயத்தில் மென்மையா?

உரிமை பறிபோகிற விஷயத்தில் மென்மையா?

கச்சத்தீவு, காவிரி, முல்லை பெரியாறு பிரச்னை போன்றவற்றில், தமிழகத்தின் உரிமைகளை, தி.மு.க., விட்டுக் கொடுத்தது. அந்த வரிசையில், தற்போது அமராவதி ஆற்றின் நீராதாரத்தை பறிக்கும் வகையில், சிலந்தி ஆற்றின் குறுக்கே, கேரள அரசு தடுப்பணை கட்டி வருவதை, தி.மு.க., அரசு வேடிக்கை பார்க்கிறது.சிலந்தி ஆற்றின் குறுக்கே, கேரள அரசு தடுப்பணை கட்டும் செய்தியை, விவசாயிகள் சொல்லித்தான் தமிழக அரசே தெரிந்து கொள்ளும் நிலை உள்ளது. இது, தி.மு.க., அரசின் அக்கறையின்மைக்கு ஓர் எடுத்துக்காட்டு.தமிழகத்தின் உரிமை பறிபோகிற விஷயத்தில், முதல்வர் கண்டன அறிக்கை வெளியிட வேண்டும் என்று, மக்கள் எதிர்பார்த்தனர். இந்நிலையில், அமைச்சர் துரைமுருகன் மென்மையான முறையில் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது, தமிழகத்தின் மற்றுமொரு உரிமை பறிபோய் விடுமோ என்ற அச்சத்தை, விவசாயிகளிடம் ஏற்படுத்தி உள்ளது.பன்னீர்செல்வம்முன்னாள் முதல்வர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை