உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சூரியசக்தி மின் உற்பத்தி முதல் முறையாக 5,512 மெகா வாட்

சூரியசக்தி மின் உற்பத்தி முதல் முறையாக 5,512 மெகா வாட்

சென்னை:சூரியசக்தி மின் நிலையத்தில், சூரியனின் வெப்பத்தை விட வெளிச்சமே உற்பத்திக்கு அவசியம். நாட்டில், ஆண்டுக்கு 300 நாட்களுக்கு மேல் சூரியசக்தி மின்சாரம் கிடைப்பதற்கான சாதகமான வானிலை தமிழகத்தில் நிலவுகிறது.இதனால், நிலத்தில் அதிக திறனிலும், கட்டடங்களின் மேல் குறைந்த திறனிலும் சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மாநில மின் பகிர்ந்தளிப்பு மைய விபரத்தின்படி, தற்போது, தமிழகத்தில் ஒட்டுமொத்த சூரியசக்தி மின் உற்பத்தி திறன், 8,173 மெகா வாட்.இந்தாண்டு மார்ச் 5ம் தேதி, 5,398 மெகாவாட் சூரியசக்தி மின்சாரம் உற்பத்தியானது. இதுவே உச்ச அளவாக இருந்தது. நேற்று முன்தினம், சூரியசக்தி மின் உற்பத்தி எப்போதும் இல்லாத அளவாக, 5,500 மெகாவாட்டை தாண்டி, 5,512 மெகா வாட்டாக அதிகரித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி